முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒகேனக்கல் அருகில் குளிக்க தடை: கிராமங்களுக்கு எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

ஒகேனக்கல், ஜூலை.23 - கர்நாடக மாநிலத்திலுள்ள கபினி, கிருஷ்ணசாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரால் ஒகேனக்கல் காவிரியில் வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. வெள்ள பெருக்கு காரணமாக அருவிகளில் குளிக்க 5ம் நாளாக குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கபிணி அணை முழுமையாக நிரம்பியதை அடுத்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

கபிணி அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளமாக கொட்டுவதால் 5வது நாளாக பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. பிரதான அருவிக்குச் செல்லும் பாதையில் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில், பரிசல் ஓட்டிகளும் பரிசல்களை இயக்கவில்லை.

இந்நிலையில், கபிணியை தொடர்ந்து கிருஷ்ணராஜாசாகர் அணையலிருந்தும் உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒகேனக்கலுக்கு நீர் வரத்து வினாடிக்கு 24 கனஅடியாக அதிகரித்தது. இதனால் அருவி பகுதிக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை 5 நாளாக நீடிக்கிறது.

மேலும், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கலிலுள்ள இந்திராநகர், நாடார் காலனி, காமராஜ் நகர், ஊட்டமலை உள்ளிட்ட காவிரிக் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அங்குள்ள மக்களை பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு கூத்தப்பாடி ஊராட்சி மற்றும் வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்