முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுலை எதிர்த்து விமர்சனம்: காங்கிரசுக்கு தலைவலி

செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை.23 - மராட்டியம், அசாம், மேற்கு வங்காளம், அரியானா, காஷ்மீர், ஆகிய 5 மாநிலங்களில் காங்கிரஸ் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகல் ராஜினாமா வாலும், போர்க்கொடியாலும் காங்கிரஸ் மேலிடத்துக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலத்தில் முதல்-மந்திரி பிருதிவிராஜ் சவானை எதிர்த்து தொழில் துறை மந்திரி நாராயண் ரானே பதவியை ராஜினாமா செய்தார். 2005-ஆம் ஆம்டு சிவசேனாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த அவர் காங்கிரஸ் கட்சி மோசமான ந சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு தோல்வியே கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

நாராயண் ரானேக்கு மராட்டியத்தில் பெரிய அளவில் ஆதரவாளர்கள் இல்லாவிட்டாலும் கூட, தேர்தல் நேரத்தில் அவர் விலகி இருப்பது காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. அவரது திடீர் விலகல் காங்கரஸ் மேலிடத்துக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டியம் போலவே அசாம் மாநில காங்கிரசிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அம்மாநில காங்கிரஸ் முதல்-மந்திரி தருண் கோகோயியை எதிர்தத்ு, கல்வித் துறை மந்திரி ஹிமந்தா பிஸ்வசர்மா பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தருண் கோகோய் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், எனவே மந்திரி பதவியில் இருந்து விலகி இருப்பதாகவும் அவர் கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு 38 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இரு்பபதாக கூறப்படுவதால், அசாமில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜினாமா செய்த ஹிமந்தா மீதும் அவர் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தவித்தப்படி உள்ளனர்.

மேற்கு வங்கத்தில் காங்கிரசில் இருந்து 3 எம்.எல்.ஏக்கள் விலகி முதல்-மந்திரி மம்தா தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர். இது காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அது போல் காஷ்மிரில் காங்கிரசில் இருந்து முன்னால் எம்.பி. லால்சிங் விலகியது அம்மாநில காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அரியானா மாநிலத்தில் மாநில தலைவர் பிரிபேந்திரசிங் ஆளும் காங்கிரஸ் முதல்-மந்திரி புபீந்தர் சிங்குக்கு எதிராக வெளிப்படையாக போர்க்கொடி உயர்த்தியுள்ளார். புபீந்தர் சிங்கை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறி வருகிறார்.

காங்கிரஸ் போராட்டத்தை தொடங்கியுள்ள மந்திரிகள் மற்றும் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் ராகுலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். ராகுலின் திறமையற்ற தலைமையால்தான் காங்கிரஸ் வீழ்ச்சி அடைந்ததாக கூறி வருகிறார்கள்.

5மாநில காங்கிரசிலும் இதே கருத்து எதிரொலித்துள்ளது. இது சோனியாவை கடுமையாக அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 5 மாநில காங்கிரஸ் சிக்கலை தீர்க்க காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்