முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு விசாரணை 31-க்கு ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை.23 - சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள நிலத்தை அபகரித்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கு விசாரணையை வரும் 31-ஆம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.

இது தொடர்பான வழக்கை நீதிபதிகள் ரஞ்சனா பிரகாஷ் தேசாய், என்.வி. ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நில அபகரிப்பு தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் சமரசம் செய்து கொண்டால், அந்த வழக்குகளில் எத்தகைய தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பதைப் படித்துப் பார்க்க வேண்டும். எனவே, ஸ்டாலின் உள்ளிட்டோர் மீதான வழக்கில் புகார் தெரிவித்தவர் சமரசம் செய்து கொண்டாலும், பதவியில் உள்ளவர்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதை குற்றமாகக் கருத வேண்டும் எனத் தமிழக காவல் துறை சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. எவே, இதுபோன்ற வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்பைப் படித்துப் பார்த்த பிறகு இந்த வழக்கில் நீதிமன்றத்தின் நிலை தெரிவிக்கப்படும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

தொடர்ந்து, வழக்கின் விசாரணையை ஜூலை 31-ஆம் தேதிக்கு நீதிபதிகள் த்திவைத்தனர். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு 2010-ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்தபோது, சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள சேஷாத்ரிக்கு தொந்தமான நிலத்தை வேணுகோபால் ரெட்டி விலைக்கு வாங்கினார். அப்போது துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கொடுத்த நெரிக்குதலால் தான் தனது நிலத்தை குறைந்த விலைக்கு கொடுத்தேன் என்று அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சென்னை ஐகோர்ட்டு சேஷாத்ரி வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில் சமரசம் செய்து கொள்வதாக சேஷாத்ரி கூறினார்.

ஆனால், இதுபோன்ற வழக்கில் மனுதாரர் சமரசம் செய்து கொண்டாலும், ஆட்சியில் இருந்தவர்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதை குற்றமாகக் கருவி விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தமிழக காவல் துறை முறையிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago