முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் ஏன்? அரசு விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.23 - தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் குறித்து, மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விளக்கம் அளித்தார். சட்டப்பேரவையில் எரிசக்தித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய தேமுதிக எம்.எல்.ஏ. பார்த்தசாரதி, காற்றாலை மின்சாரம் வீணாகிறது எனவும், அவற்றைக் குறைந்த விலைக்கு வாங்கிபர் பயன்படுத்த வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்தார். தமிழக அரசு இதைச் செய்யாமல் கூடுதல் விலைக்கு எரிவாயு மின்சாரத்தை வாங்குவது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: காற்றாலைகள் மின்சாரத்தில் பல்வேறு மாறுபாடுகல் காணப்படுகின்றன. காலையில் 400 மெகாவாட் எனவும், மாலையில் 4 ஆயிரம் மெகாவாட் என்ற நிலையிலும் மின் உற்பத்தி இருக்கிறது. அவற்றில் இருந்து மின்சாரம் நிரந்தரமாகக் கிடைப்பதில்லை. மின் உற்பத்திக்கும், பற்றாக்குறைக்கும் இடைவெளி ஏற்படும்போது மின்வெட்டு செய்யப்படுகிறது. இதைச் சமாளிப்பதற்கு தனியார்களிடம் இருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய வேண்டியிருக்கிறது என்றார் அமைச்சர் விஸ்வநாதன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்