முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு 54 மடிக்கணினிகள்

செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2014      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூலை.23 - முதல்வர் ஜெயலலிதா திரைப்படத் துறைக்கு இதுவரை யாரும் செய்திராத அரிய பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள் - செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திரைப்படக் கல்லுhரி மாணவர்களுக்கு 54 விலையில்லா மடிக்கணினிகள் வழங்கி விழாப்பேருரை ஆற்றினார்

எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா சென்னை தரமணியிலுள்ள எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன ஆர்.ஆர். திரையரங்கத்தில் 22.07.2014 அன்று மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது.

இவ்விழாவில் செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் திரைப்படத் துறைக்கு இதுவரை யாரும் செய்திராத அரிய பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள், மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தில் மிகுந்த அக்கறை கொண்ட காரணத்தினால்தான், அவர்களுக்குள்ளாக முடங்கிக்கிடக்கும் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் உலகத்தரத்தில் அவர்களின் கல்வித்திறமையை மேம்படுத்தி உலகளாவிய போட்டிகளில் முதன்மை பெற உதவிடும் வகையில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை மூன்றாண்டுகளாக தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, இக்கல்லுhரியில் 226 மாணவ, மாணவிகள் விலையில்லா மடிக்கணினிகள் பெற்று பயனடைந்துள்ளனர் அதன் தொடர்ச்சியாக தற்போது இக்கல்லுhரியில் இரண்டாமாண்டு பயிலும் 54 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இக்கல்லுhரியில் திரைப்படக் கல்வியின் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன் (ஹniஅயவiடிn யனே ஏளைரயட நுககநஉவள) என்கிற பட்டயப் படிப்பிற்கான பாடப்பிரிவினை புதியதாக அறிமுகப்படுத்தி அதற்கு ரூ.9.50 கோடி ஒதுக்கியுள்ளார்கள். அதில் ஒரு பகுதியாக ரூ.3.69 கோடி மதிப்பீட்டில் இந்தப் புதிய பாடப்பிரிவிற்கான புதிய கட்டடம் கட்டப்பட்டு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் திறக்கப்பட உள்ளது.

இந்நிறுவன வளாகத்திலேயே திரைப்படத் துறையினரும், கல்லுhரி மாணவர்களும் பயன்பெறும் வகையில் 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் கூடிய முழுவதும் குளிரூட்டப்பட்ட இரண்டு படப்பிடிப்புத் தளங்கள் அமைப்பதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் ஆணையிட்டுள்ளார்கள்.

அம்மா அவர்களின் ஆணையின்படி, இக்கல்லுhரியில் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் முன்னாள் முதல்வரும், திரைப்படத் துறையின் சாதனையாளருமான எம்.ஜி.ஆர். அவர்களின் மார்பளவு திருவுருவச் சிலையும், கல்லுhரி நுழைவு வாயிலும் அமைக்கப்படவுள்ளது. திரைப்படக் கல்லுhரி மாணவர்கள் தங்கி பயில வசதியாக புதிய மாணவர் தங்கும் விடுதி கட்டுவதற்கு ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டு, தற்போது விடுதி கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழ்த் திரையுலகிற்கு, இளைஞர்களை படைப்பாற்றல் மிக்கவர்களாக உருவாக்கிவரும் எம்.ஜி.ஆர். அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தை புதுப் பொலிவு பெற வைக்கும் வகையில் ரூ.1.43 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய நவீன படப்பிடிப்புத் தளம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மேலும், ரூ.1.83 கோடி செலவில் செல்வந்தர் மாளிகை மற்றும் டப்பிங் தியேட்டரை படப்பிடிப்புத் தளமாக மாற்றி புனரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. திரைப்படக் கல்லுhரியிலுள்ள முன்காண் திரையரங்கத்தை ரூ.99 இலட்சம் மதிப்பீட்டில் நவீனப்படுத்தும் பணி தற்போது முடிவுறும் தருவாயில் உள்ளது என்று பேசினார்.

மேலும் அவர் பேசியதாவது, இவை எல்லாவற்றிற்கும் மேலாக திரைப்படத்துறை இன்றைய காலக்கட்டத்தில் சுதந்திரமாக செயல்படுகிறதென்றால் அதற்கு முழுமுதற் காரணம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான் என்றால் அது மிகையாகாது.

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை உலகமே வியக்கும் வகையில் தமிழ்நாட்டில் கொண்டாடிய பெருமை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களையே சாரும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற இவ்விழாவிற்கு 10 கோடி ரூபாயை தமிழக அரசின் நல்கை தொகையாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழங்கினார்கள்.

அதுமட்டுமல்ல, 2011 மற்றும் 2012-ஆம் ஆண்டுகளில் சென்னையில் நடைபெற்ற பன்னாட்டு திரைப்பட விழாவிற்கு 75 இலட்சம் ரூபாய் மானியமாகவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் அளிக்கப்பட்டது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் முதல் நிலைக்கு கொண்டு சென்றிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் திரைப்படத்துறையையும் சிறப்பாக வாழ வைத்திட தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள் என்பதை தெரிவித்துக் கொண்டு இன்றைய தினம் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பித்துள்ள அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்திரைப்படக் கல்லுhரி மாணவர்களுக்கும் திரைப்படத் துறைக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு தொடர்ந்து நல்லாதரவு வழங்கி வரும் என்று தெரிவித்தார்.

இவ்விழாவில், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் எம்.கே. அசோக், செய்தித் துறை கூடுதல் இயக்குநர் கே.டி. புகழேந்தி, திரைப்படக் கல்லுhரி முதல்வர் இராமசாமி சுப்பிரமணி ஆகியோர் பங்கேற்றனர். கல்வி பொறுப்பாளர் முத்துமாணிக்கம் அனைவரையும் வரவேற்றார். முடிவில் முன்னாள் முதல்வரும் பிரிவு தலைவருமான ந. சீனிவாசன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago