முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

13154 மாணவர்களுக்கு சூரிய எரிசக்தியுடன் கூடிய விளக்கு

செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.23 - தமிழக சட்டசபையில் நேற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அத்துறைக்கான மானியக்கோரிக்கைகளை தாக்கல் செய்தார். அப்போது அவர் அறிவித்ததாவது:_

1.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளில் சாரணர் சாரணியர் இயக்கம் செயல்படுத்துதல்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சாரணர் சாரணியர் இயக்கத்தினை சீரிய முறையில் செயல்படுத்திட ஒரு பள்ளிக்கு ரூ.55,000/- வீதம், 207 பள்ளிகளுக்கு ரூ.113.85 இலட்சத்தில் இச்செலவினம் மேற்கொள்ளப்படும்.

2.ஆதி திராவிடர் நல பள்ளிகளை பராமரிக்கும் பொருட்டு ரூ.10,000/- செலவினத் தொகை வழங்குதல்

1096 ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் உள்ள குழல் விளக்கு, மின் விசிறி மற்றும் தண்ணீர்க் குழாய் ஆகியவற்றினை பராமரிக்க ஒரு பள்ளிக்கு ஆண்டொன்றுக்கு ரூ.10000/- வீதம் ரூ.109.60 இலட்சத்தில் இச்செலவினம் மேற்கொள்ளப்படும்

3.மலைப் பகுதிகளில் இயங்கி வரும் பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ / மாணவியருக்கு (6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை) சூரிய எரிசக்தியுடன் கூடிய விளக்கு வழங்குதல்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆணைப்படி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் மலைப்பகுதிகளில் இயங்கி வரும் 216 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று வரும் 13154 மாணவ / மாணவியருக்கு முதற்கட்டமாக ஒரு மாணவருக்கு ஒரு சூரிய எரிசக்தியுடன் கூடிய விளக்கு ரூ.550/- மதிப்பில் ரூ.73.00 இலட்சம் செலவில் வழங்கப்படும்.

4.பள்ளி மாணவ / மாணவியரை கல்வி சுற்றுலா அழைத்து செல்லுதல்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணைப்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயிலும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ / மாணவியரை கல்வி சுற்றுலா அழைத்துச்செல்ல ஒரு பள்ளிக்கு ரூ.25,000/- வீதம், 207 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ.51.75 இலட்சத்தில் இச்செலவினம் மேற்கொள்ளப்படும்.

5. ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மாணவ / மாணவியர்களுக்கு பொது நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி அளித்தல்:

தொழிற்கல்வி பயிற்றுவிக்கும் பொறியியல் கல்லுhரிகளில் பட்டப்படிப்பு படித்து தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மாணவ, மாணவியர்கள் ஐ.ஐ.டி. போன்ற மைய கல்வி நிறுவனங்களில் போன்ற மேற்படிப்பு படிக்க பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியுள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 பொறியியல் பட்டதாரிகளை தேர்வுசெய்து, தகுதியின் அடிப்படையில் மேற்படி தேர்வு எழுதுவதற்கான ஆயத்த பயிற்சி அளிக்க ஒரு மாணவருக்கு ரூ.50,000 வீதம் ரூ.50.00 இலட்சத்தில் இச்செலவினம் மேற்கொள்ளப்படும்.

6. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளுக்கும் உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கும் முதலுதவிப் பெட்டி வழங்குதல்

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணாக்கர்களுக்கு சிறு சிறு விபத்துக்கள் நேரிடும் போது அவர்களுக்கு முதலுதவி அளித்திடும் பொருட்டு 1346 விடுதிகளுக்கும் 100 அரசு பழங்குடியின உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கும் தலா ஒரு முதலுதவிப் பெட்டி ரூ.3400 மதிப்பில் மொத்தம் ரூ.49.16 இலட்சம் செலவில் வழங்கப்படும். ஆதிந.7

7.ஆதிதிராவிடர் நலஉயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு சுகாதார குட்டை தகளி வழங்குதல்

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் 110 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 75 மேல்நிலைப்பள்ளிகளில் 32,112 மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளி மாணவியரின் சுகாதார நலனை பாதுகாக்கும் வகையில் ஒரு பள்ளிக்கு ஒரு சுகாதார குட்டை தகளி ரூ.25,000/- மதிப்பில் 185 ஆதி திராவிட நல பள்ளிகளுக்கு ரூ.46.25 இலட்சம் செலவில் வழங்கப்படும்.

8.குன்னுhர் மற்றும் கூடலுhர் கோட்டங்களில் சிறப்பு தனி வட்டாட்சியர் அலுவலகம் தோற்றுவித்தல்

நீலகிரி மாவட்டத்தில் 32,813 பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். மாவட்ட தலைநகரான உதகமண்டலத்திலிருந்து கூடலுhர் மற்றும் குன்னுhர் பகுதிகள் 40 கி.மீ. தொலைவில் உள்ளதால் அரசின் நலத்திட்டங்கள் பழங்குடியின மக்களை எளிதில் சென்றடைய குன்னுhர் மற்றும் கூடலுhர் பகுதிகளுக்கு தனி வட்டாட்சியர் அலுவலகம் செயல்படுத்த ஆண்டொன்றுக்கு ரூ.40.00 இலட்சத்தில் இச்செலவினம் மேற்கொள்ளப்படும்.

9.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளில் விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 207 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கிடையே மாவட்ட மற்றும் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்திய பின்னர், மாநில அளவில் போட்டிகள் நடத்தி சான்றிதழுடன் பரிசுகள் வழங்க ரூ.26.00 இலட்சத்தில் இச்செலவினம் மேற்கொள்ளப்படும். ஆதிந.7

10.ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு யோகா வகுப்பு நடத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 1397 பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு யோகா பயிற்சி அளிப்பதற்கு முதற்கட்டமாக 100 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 107 உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்களுக்கு ஒரு பள்ளிக்கு 2 ஆசிரியர்கள் வீதம் 414 ஆசிரியர்களுக்கு அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் வாயிலாக யோகா பயிற்சி ரூ.16.80 இலட்சம் செலவினத்தில் அளிக்கப்படும்.

11.மனித நேய வாரவிழாவை சிறப்பாக நடத்துவதற்கான தொகையினை உயர்த்துதல்

தீண்டாமையை ஒழிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் அனைத்து மாவட்டங்களில் மனித நேய வாரவிழா விழாவினை சிறப்பாக நடத்துவதற்கு ஒரு மாவட்டத்திற்கு ரூ.15,000/- லிருந்து ரூ.50,000/- வீதம் உயர்த்தியும் மற்றும் மாநில அளவில் விழாவினை நடத்துவதற்கு ரூ.65,000 லிருந்து ரூ.1.00 இலட்சமாக உயர்த்தியும் வழங்கப்படும்.

12.சமபந்தி போஜனத் தொகையினை உயர்த்துதல்

தீண்டாமையை ஒழிப்பதற்காகவும், மத நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்காகவும், மாவட்டங்களில் நடைபெற்று வரும் சமபந்தி விருந்தினை சிறப்பாக நடத்திடும் வகையில் ஒரு மாவட்டத்திற்கு 1000 நபர்களுக்கு உணவளிக்க மாநில அரசின் பங்காக வழங்கப்பட்டு வரும் தொகையை ரூ.2500/- லிருந்து ரூ.5000/- ஆக உயர்த்தியும் மற்றும் இத்திட்டத்தினை 31 மாவட்டங்களிலும் (சென்னை மாவட்டம் தவிர) செயல்படுத்திட ரூ.1.55 இலட்சத்தில் இச்செலவினம் மேற்கொள்ளப்படும்.

13.இந்திய ஆட்சிப் பணிக்கான பயிற்சி மற்றும் மாநில அரசின் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (தொகுதி1) முதனிலை தேர்வில் தேர்ச்சி பெறும் பழங்குடியின மாணவர்களின் பயிற்சி வகுப்புகளுக்கு நிதியுதவி வழங்குதல்.

மைய அரசின் இந்திய குடிமைப்பணிகள் மற்றும் மாநில அரசின் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (தொகுதி-1) முதனிலைத் தேர்வில் தேர்ச்சி பெறும் பழங்குடியின தேர்வர்களுக்கு முதன்மைத்தேர்வினை எழுத ஆகும் இடைநிகழ் செலவினை மேற்கொள்ள ஏதுவாக ஒரு தேர்வருக்கு ரூ.50,000/- மைய அரசின் பழங்குடியினர் துணைத்திட்டத்திற்கான சிறப்பு நிதியிலிருந்து வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்