முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முதல்வர் கடிதம்

செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2014      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூலை 23 - தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று நேற்று முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியுள்ளார்..இதற்கு ரூ.1520 கோடி செலவில் திட்டம் ஒன்றை மத்திய அரசிடம் அளித்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரியமான கடல் பகுதியான பாக் நீரிணை பகுதியில் மீன் பிடிக்கும்போது, இலங்கை கடற்படையின் அச்சுறுத்தலுக்கு ஆளாவது குறித்து தங்களுக்கு பலமுறை கடிதம் எழுதியிருக்கிறேன்.

இப்பிரச்சனையில் தங்கள் அரசு சாதகமான முறையில் நடவடிக்கை எடுத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய உங்கள் அதிகாரிகள் விரைந்து செயல்பட்டார்கள்.

கடந்த ஜூன் மாதம் 17-ந் தேதி அமைச்சகங்களுக்கு இடையிலான கூட்டம் வெளியுறவுத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றதாக அறிகிறேன். மத்திய அரசு உயர்மட்ட அளவில் இந்த பிரச்சனை எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பதை நான் வரவேற்கிறேன். இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதின் அடிப்படையில் செயல்படுத்தக் கூடிய அம்சங்களின் தொடர்பாக எனது கவலையை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசின் கால்நடைத்துறை, மீன்வளத்துறை, வேளாண்துறை மூலம் தமிழக அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டு உள்ளது.

கலங்கரை விளக்க இயக்குநரகம் மூலமாக சர்வதேச கடல் எல்லையை குறிக்கும் வகையில் மிதவைகளை மிதக்கவிடுவது குறித்து ஆலோசனை தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே தங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சட்டவிரோதமாக இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறேன். கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கிய ஒப்பந்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் தமிழக அரசும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. இந்த பிரச்சனை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆகவே, இந்திய கடல் எல்லை பிரச்சனை தீர்க்கப்பட்ட ஒன்றாக ஏற்கவில்லை. ஆகவே, நீதிமன்றத்தில் தாவாவில் உள்ள நிலையில் இந்திய கடல் எல்லையை குறிக்கும் வகையில் மிதவைகளை அமைப்பது சாத்தியமானதல்ல, சரியானதுமல்ல.

மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடி தொழிலை மாற்றியமைப்பதற்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை எடுத்துள்ளது. நீண்ட கப்பல்களை வாங்குவதற்கு 50% மானியம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி தங்களை சந்தித்த போது அளித்த மனுவில் ரூ.1,520 கோடியில் மீனவர்களுக்கான சிறப்புத் திட்டம் ஒன்றை தங்களிடம் அளித்திருக்கிறேன். அத்துடன் கடலில் தூர்வாருவதற்கு ஆண்டுதோறும் 10 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பாக் நீரிணை பகுதியில் தற்போது பயன்படுத்தப்படும் மீன்பிடி படகுகளுக்கு பதிலாக ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் கப்பல்களை வாங்க ரூ. 975 கோடி வழங்க வேண்டும்.

* சுமார் 80 கோடி மதிப்பீட்டில் நடுக்கடலில் மீன்களை பதப்படுத் தும் நிலையம் அமைப்பது. இதில் ஆழ்கடலில் வர்த்தக ரீதியில் மீன்பிடிக்கும் பேபி வசல்ஸ் எனப் படும் படகுகளுக்கு ஆதரவாக ‘கேரியர் மதர் வெசல்ஸ்’ என்ற கப்பலை நிறுத்துவதும் உள்ளடக்கிய தாகும். இதன் மூலம் மீன்பிடித்த லுக்கு அதிக வலுவும், பாக் நீரினை பகுதியில் ஏற்படும் அழுத்தங்களும் குறையும்.

* இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம் மீன்பிடி துறைமுகம் மற்றும் முகையூர், திருவள்ளூர் மாவட்டத்தில் எண்ணூர் மீன்பிடி துறைமுகம் ஆகியவற்றில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.420 கோடி அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடப்பட்டது.

* மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் அதன் முகத்துவாரங்களில் தூர்வாரு வதற்காக ஆண்டுக்கு ரூ.10 கோடி அனுமதிப்பது.

* படகு உரிமையாளர்களை வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர் கள் பட்டியலில் சேர்ப்பதற்கு நடை முறையில் சாத்தியத்திற்கு ஒவ்வாத அளவீடுகளை நீக்குதல் அல்லது மறு பரிசீலனை செய்ய வேண்டும். ஆழ் கடலில் மீன்பிடிக்கும் எந்திர படகு களுக்கு மாதம் 500 லிட்டர் ஸ்பீடு டீசல் வழங்குவதும், அவகளுக்கு சுங்கவரி விதிக்கும் முறையும் நடைமுறைக்கு ஒத்துவராதது ஆகும். இவற்றையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

* பாரம்பரிய நாட்டுப்படகுகளை மோட்டார் மயமாக்குவதற்கு தற்போது வழங்கப்படும் ரூ.3 கோடியே குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ.9 கோடி என உயர்த்த வேண்டும். அப்போது தான் 5 ஆண்டு காலத் திற்குள் எஞ்சிய 32 ஆயிரம் பாரம்பரிய படகுகளை மோட்டார் மயமாக்க முடியும்.

பாக் நீரினை பகுதியில் மீன்பிடிக் கும் நடைமுறைகளை உறுதிப்படுத் துவதற்காக ஏற்கனவே வழங்கப் படும் விரிவான சலுகைகளுக்கு அப்பாற்பட்டு கூடுதலாக சாதாரண வலைகளை கில்நெட்ஸ் தரத்திற்கு மாற்ற கூடுதலாக ரூ100 கோடி மானியம் வழங்கப்படும்.

பாக். நீரினை மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகள் சிறப்பு கடல் சுற்றுச்சூழல் பகுதிகளாக்கப்பட்டு உள்ளது. மன்னார் வளைகுடா இந்தியாவின் முதல் கடல் பல்லுயிர் பாதுகாப்பு பகுதியாக்கப்பட்டது. பாக். நீரினை அமைதியான நீர்ப் பகுதியாகும். இந்த இரு கடல் பகுதி களும் திறந்த கடல்சார்ந்த தொழிலுக்கு உகந்ததாக இருக்காது. மேலும் கடலோர மாவட்டங்களிலும் இந்த நடவடிக்கைகளினால் பாதிப்பு ஏற்படுவதால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இரு நாடுகளிடையே மீனவர்கள் அளவில் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போதும், பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் இரு நாட்டு மீனவர்களும் மீன் பிடிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கில்öட் எனப்படும் உயர்தர மீன் பிடி வலை மற்றும் நீண்ட தூரத்திற்கு பயன்படுத்தப்படும் வலைகள் குறித்துதான் குறை தெரிவிக்கப் பட்டது. இந்த அணுகுமுறையை விரிவாக விவாதிக்க வேண்டும்.

இந்த விஷயத்தை இந்தியா -இலங்கை கூட்டு பணிக்குழு தீவிர மாக அணுக வேண்டியது அவசியமாகும். தமிழ்நாடு சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ள கவலைகளை அமைச்சர்கள் குழு கவனத்தில் கொண்டு அதற்கு ஏற்ப உணர்வுப்பூர்வமான

இந்த விஷயத்தில் நீண்டகால தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் நம்புகிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்