முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. கவர்னராக ராம்நாயக் பதவியேற்பு

புதன்கிழமை, 23 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, ஜூலை 24 - உத்தரபிரதேச மாநில புதிய கவர்னராக பாஜக மூத்த தலைவர் ராம்நாயக் பதவியேற்று கொண்டார். அவருக்கு அலகாபாத் ஐகோர்ட் தலைமை நீதிபதி தனஞ்செயா ஒய். சந்திரசூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மத்தியில் பாஜ தலைமையிலான புதிய ஆட்சி அமைந்ததும் கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நியமிக்கப்பட்ட கவர்னர்களை ராஜினாமா செய்யுமாறு நெருக்கடி கொடுக்கப்பட்டது. உத்தரபிரதேச கவர்னர் ஜோஷி கடந்த ஜூன் 17ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். அதை தொடர்ந்து 5 மாநில கவர்னர்கள் ராஜினாமா செய்தனர். கர்நாடக கவர்னர் பரத்வாஜ் உள்ளிட்ட 2 மாநில கவர்னர்களின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் காலியாக இருந்த 6 மாநில கவர்னர் பதவிகளுக்கு கடந்த வாரம் புதியவர்கள் நியமிக்கப்பட்டனர். மகராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த பாஜ மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்நாயக் உ.பி. கவர்னராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் மாலை லக்னோவில் உள்ள ராஜ்பவனில் கவர்னராக பதவியேற்று கொண்டார். அவருக்கு அலகாபாத் ஐகோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் மூத்த அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்