முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு: காவிரியில் வெள்ள அபாயம்

புதன்கிழமை, 23 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

ஒகேனக்கல், ஜூலை 24 - கர்நாடக அணைகளில் இருந்து நேற்று காலை 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரியாற்றில் நீர்வரத்து இரு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் கரையோர கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல்லில் வறண்டு கிடந்த பாறைகளில் செந்நிறத்தில் புது வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. காவிரியில் கரைபுரண்டு வெள்ளம் ஓடுவதால் முதலைபண்ணை, ஊட்டமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து நேற்று 70 ஆயிரம் கன அடிக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் இந்த நீர் ஒகேனக்கல்லை விரைவில் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நீர்வரத்து இரு மடங்கு அதிகரிக்கும் என்பதால் கரையோர கிராமங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்