முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்டோக்களுக்கு ஜி.பி.எஸ். மீட்டர் விரைவில் வழங்கப்படும்

புதன்கிழமை, 23 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை. 23–சென்னை மக்கள் பயன்பாட்டிற்காக ஆட்டோக்களுக்கு ஜி.பி.எஸ். மீட்டர் விரைவில் வழங்கப்படும்: என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியிருக்கிறார்.

சட்டசபையில் போக்குவரத்து துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. சவுந்தரராஜன் பேசியதாவது:–

தமிழ்நாட்டில் இயக்க ஊர்திகள் பல்கி பெருகும் நேரத்தில் பொது போக்கு வரத்தையும் அதிகப்படுத்த வேண்டும். சென்னையில் மோனோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.இதில் வடசென்னை பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தை அமைக்க வேண்டும்.சென்னையில் ஆட்டோக்களுக்கு திருத்தப்பட்ட புதிய மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்று ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. எரி பொருள் கட்டண உயர்வுக்கு ஏற்ப கட்டணம் உயர்வை அமல்படுத்த தேவையான முத்தரப்பு குழுவை அமைக்க வேண்டும்.பிப்ரவரி மாதத்திலேயே ஆட்டோக்களுக்கு அரசு புதிதாக ஜி.பி.எஸ். மீட்டர் வழங்குவதாக அறிவித்து இருந்தது. ஆனால் இன்னும் இந்த மீட்டர் வழங்கப்படவில்லை.

அமைச்சர் செந்தில் பாலாஜி:– சென்னை மக்கள் பயன்பாட்டிற்காக புதிய ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்து தற்போது 100 சதவீதம் சிறப்பாக செயல் பட்டு வருகிறது. புதிய மீட்டர் வழங்க முதல்–அமைச்சர் நிதி வழங்கியுள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற காரணத்தால் அந்த சமயத்தில் புதிய மீட்டர் வழங்க முடிய வில்லை. தற்போது எல்காட் நிறுவனத்துக்கு முதல்–அமைச்சர் ஒப்பந்தம் அளித்துள்ளார். எனவே விரைவில் புதிய ஜி.பி.எஸ். மீட்டர் முதல்–அமைச்சர் தனது கரங்களால் வழங்க உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்