முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதாவின் ‘புதுவாழ்வு’ திட்டத்திற்கு பாராட்டு

புதன்கிழமை, 23 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை 24 – உலக வங்கி தலைவர் டாக்டர் ஜிம் யங் கிம் மற்றும் அவரது குழுவினர் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சியில் செயல்பட்டு வரும் புதுவாழ்வு திட்டப்பணிகளை பார்வையிட்டனர். அப்போது முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.

இந்திய அளவில் மட்டுமல்ல உலகளவில் வாழ்வாதார முயற்சிகளுக்கு முன் உதாரணம் முதல்வர் ஜெயலலிதா என்று அவர்கள் மனம் திறந்து பாராட்டினார்.

காஞ்சிபுரம் படப்பை ஊராட்சியில் உள்ள மக்கள் அமைப்புகளான கிராம வறுமை ஒழிப்பு சங்க நிர்வாகிகள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பிரதிநிதிகள், தொழில் குழு உறுப்பினர்களுடன் உலக வங்கி தலைவர் மற்றும் குழுவினர் கலந்துரையாடினர்.

புதுவாழ்வு திட்டம் மூலம் நிதி உதவி, திறன் வளர்ப்பு ஆகிய பயன்கள் பெற்று மக்கள் தமது வாழ்வில் முன்னேறி உள்ளதையும், தமிழ் நாட்டின் தொழில் வளர்ச்சி இம்முன்னேற்றத்திற்கு அடிகோலியது என்பதையும் கேட்டறிந்தனர். புதுவாழ்வு திட்டத்தின் செயல்பாடுகள், அமைப்புகளின் இணையதள தகவல் மேலாண்மை ஆகியவை பெண்களின் முன்னேற்றத்தை எளிதாக்கியுள்ளது என்றும் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த ஆய்வின்போது டாக்டர். ஜிம் யங் கிம் மற்றும் உலக வங்கி இயக்குநர் ஒனோ ரூல், உலக வங்கியின் இந்திய இயக்குநர் சொஜ டிவீயஸ், பன்னாட்டு நிதிக் கழக பிரிவு மேலாளர் சோபா செட்டி, ஊரக மற்றும் வாழ் வாதாரம் (தெற்காசிய பகுதி) முதுநிலை ஊரக வளர்ச்சி வல்லுநர் சமிக் தாஸ், ஆகியோர் பங்கேற்றனர்.

இதன் பின்னர் இளைஞர் திறன் வளர்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு செயல்பாடுகளை, கண்டறிய இந்தியாவில் செயல்பட்டு வரும் டிரயம்ப் பன்னாட்டு (ஆயத்த உள்ளாடை தயாரிப்பு) நிறுவனத்திற்கு வந்தனர். அங்கு பணிபுரிந்து வரும் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த புதுவாழ்வு திட்ட இளைஞர்களிடம் திட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற பயன்கள் பற்றியும், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை பற்றியும் அவர்கள் கேட்டறிந்தனர். புதுவாழ்வு திட்டத்தின் சீரிய செயல்பாடுகளுக்கு பாராட்டும் தெரிவித்தனர்.

இந்நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 1,200 பணியாளர்களில் 674 இளைஞர்கள் இத்திட்டத்தின் மூலம் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். புதுவாழ்வு திட்டம் இந்திய அளவில் மட்டுமின்றி, உலக அளவில் வாழ்வாதார முயற்சிகளுக்கு ஓர் முன்னுதாரணம் என்றும் பாராட்டினர். இதில் 10 பணியாளர்கள் மாற்றுதிறனாளிகள் என்பதை கண்டு வியந்து, முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.

இந்த ஆய்வின்போது, நிதி செயலாளர் உதயச்சந்திரன், புதுவாழ்வு திட்ட இயக்குநர் மைதிலி க. ராஜேந்திரன், பொருளாதார விவகாரங்கள் துறை துணை செயலாளர் பிரிஜேஷ் பாண்டே, மாவட்ட கலெக்டர் பாஸ்கரன், கூடுதல் திட்ட இயக்குநர் சஜீவனா, வாழ்வாதார சிறப்பு வல்லுநர் சக்கரபாணி மற்றும் மாவட்ட திட்ட மேலாளர் தனசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழக அரசின் புது வாழ்வு திட்டம் உலக வங்கியின் நிதி உதவியோடு வறுமையை ஒழித்து மக்களை ஆற்றல்படுத்தும் திட்டமாகும். இத்திட்டமானது தமிழகத்தில் 26 மாவட்டங்களில் உள்ள 120 பிற்படுத்தப்பட்ட வட்டாரங்களில் 4174 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ.1667 கோடியில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் தமிழகத்தில் மாற்று திறனாளிகள், பழங்குடியினர் நலிவுற்றோர் உள்ளிட்ட 9 லட்சத்து 60 ஆயிரம் ஏழை குடும்பங்களை

பயனடைய செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago