முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விசாரணைக் குழுவுக்கு விசா மறுப்பு: ராமதாஸ் கண்டனம்

புதன்கிழமை, 23 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை. 24 – ஐ.நா. போர்குற்ற விசாரணைக் குழுவினருக்கு விசா வழங்க நரேந்திர மோடி அரசு முன்வர வேண்டும்என்றுபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.கூறியிருக்கிறார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் இடைவிடாத முயற்சி காரணமாக இலங்கை மீது ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணைக்கு ஆணையிடுவதற்கான தீர்மானம் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டு, அதனடிப்படையில் 16 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

ஐ.நா. அதிகாரி சாண்ட்ரா பெய்தாஸ் தலைமையிலான இந்தக்குழு இலங்கையில் விசாரணை நடத்த அனுமதி அளிக்க முடியாது அந்நாட்டு அதிபர் ராஜபக்சே அறிவித்து விட்ட நிலையில், ஐ.நா. விசாரணையை சென்னையில் நடத்த வேண்டும் என்று பல வாரங்களுக்கு முன்பே மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தேன். அதைப் போலவே, இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையை இந்தியாவில் நடத்தும் நோக்குடன் ஐ.நா. போர்க்குற்ற விசாரணைக் குழுவினருக்கு விசா வேண்டி ஐ.நா. மனித உரிமை ஆணையம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும், ஆனால், அந்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கை மனித உரிமை ஆணையர் பிரதீபா மஹன மஹேவா உறுதி செய்திருப்பதுடன், இலங்கைக்கு ஆதரவான இந்தியாவின் இந்த நிலைப்பாடு மிகவும் முக்கியமானது என்றும் கூறியுள்ளார். இந்தியாவிலும், மற்ற சார்க் நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், மாலத்தீவு ஆகிய நாடுகளிலும் விசாரணைக்குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தான் போர்க்குற்ற விசாரணையை அமெரிக்காவின் நியூயார்க், சுவிட்சர்லாந்தின் ஜெனிவா, தாய்லாந்தின் பாங்காக் ஆகிய நகரங்களில் நடத்த ஐ.நா. தீர்மானித்தாகவும் கூறப்படுகிறது.

இந்த செய்தி உண்மையாக இருந்தால் அது இந்தியாவின் மனித உரிமை வரலாற்றில் மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தி விடும்.

மனித உரிமைகளுக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங் (ஜூனியர்) முதல் நெல்சன் மண்டேலா வரை அனைவருக்கும் மானசீக வழிகாட்டியாக போற்றப்படும் மகாத்மா காந்தியை இந்த உலகிற்கு வழங்கிய இந்தியா, மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு எதிரான விசாரணைக்கு முட்டுக்கட்டைப் போடுகிறது என்பதையும், மனித உரிமை ஆர்வலர்களுக்கு விசா தர மறுக்கிறது என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையை சென்னையில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மருத்துவர் அன்புமணி ராமதாசு தலைமையிலான குழு ஏற்கனவே வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளது. அதையும், உலகத் தமிழர்களின் உணர்வையும் மதித்து போர்க்குற்ற விசாரணையை இந்தியாவில் நடத்த அனுமதிக்க வேண்டும்.

அதற்கு வசதியாக ஐ.நா. போர்குற்ற விசாரணைக் குழுவினருக்கு விசா வழங்க நரேந்திர மோடி அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago