முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழிலாளர்களுக்கு இலவச உடல் பரிசோதனை: அமைச்சர்

புதன்கிழமை, 23 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.24 - மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்: மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் பதிலுரை. மாண்புமிகு திரு. வி. செந்தில்பாலாஜி: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, இந்துக்கள் வணங்கிடும் கீதையைப்போல்; கிறித்துவர்கள் வணங்கிடும் பைபிளைப்போல்; இஸ்லாமியர்கள் வணங்கிடும் குர்ரானைப்போல்; உலக தமிழ் மக்கள் வணங்கிடும் புனித பொக்கிஷம்தான் நீங்கள் அம்மா. (மேசையைத் தட்டும் ஒலி) தமிழ் தாய் உங்களால்தான் தலை நிமிர்ந்தாள்; தமிழர்களோ உங்களால்தான் பெருமை பெற்றார்கள்.

பாண்டியர்களின் தலைநகரம் மதுரை; சோழர்களின் தலைநகரம் தஞ்சை; பல்லவர்களின் தலைநகரம் காஞ்சி; அம்மா நீங்களோ அறிவின் தலைநகரம். (மேசையைத் தட்டும் ஒலி) அறிவுச் சுடராம் அண்ணாவாகவும்; அன்புக் கடலாம் புரட்சித் தலைவராகவும்; பாச ஊற்றாம் அன்னை தெரசாவாகவும் மொத்தத்தில் மூவரின் வடிவாய் வாழும் தங்கத் தலைமைதான் அம்மா நீங்கள். அம்மா! நீங்கள் அகல் விளக்கு அல்ல; அதிசயங்கள் பல நிகழ்த்தும் அற்புத விளக்கு. (மேசையைத் தட்டும் ஒலி) பேச்சுக்கு மட்டும் தமிழ் என்று வாழ்பவர்கள் மத்தியில், மூச்சே தமிழாக வாழும் முதல்வர்தான் நீங்கள் அம்மா. (மேசையைத் தட்டும் ஒலி) முத்தமிழின் வளர்ச்சியாக நான்காம் தமிழாய், அறிவியல் தமிழுக்கு சிம்மாசனம் போட்ட சிந்தனைக் களஞ்சியம்தான் நீங்கள் அம்மா. தேர்தலை பற்றி மட்டுமே சிந்திக்காமல், தேசத்தை பற்றியே சிந்திக்கும் தேசியத் தலைமை, மக்கள் நேசிக்கும் தலைமை, மக்களை நேசிக்கும் தலைமை (மேசையைத் தட்டும் ஒலி) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பொற்பாதம் பணிந்து வணங்குகிறேன்.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, ஏழைகளுக்கு உதவிடுவேன், நோயாளிகளிடம் இரக்கம் காட்டுவேன் என்று காலமெல்லாம் ஏழை மக்களுக்கு தொண்டு செய்த தூயவர்தான் அன்னை தெரசா. 'எழுமின், விழுமின், உழைமின்' என்று இளைஞர்களை ஊக்கப்படுத்தி சமுதாய மறுமலர்ச்சிக்கு அறைக்கூவல் விடுத்தார் சுவாமி விவேகானந்தர். 'வாடிய பயிரைக் கண்டபொழுதெல்லாம் வாடினேன்' என்று மனித நேயத்தின் மாணிக்கமாய் விளங்கினார் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார். 'இரத்தத்தைத் தாருங்கள், நான் சுதந்திரத்தைத் தருகிறேன்' என்று அழைப்பு விடுத்தார் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ். மக்கள் நலன் காப்பதற்காக தன் நலனை மறந்து நாளும் உழைத்து வருகின்றார் நம் அம்மா. திராவிட இயக்க வரலாற்றில் அண்ணன், தம்பி பாசம் வளர்த்தார் அறிஞர் அண்ணா; இரத்தத்தின் இரத்தமே என்று இதய சுத்தியோடு வாழ்ந்தார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்; ஆனால், நம் அம்மாவோ தம் தொண்டர்களுக்கு மட்டுமின்றி தமிழக மக்களுக்கும் உறவுகளில் புனித உறவாம், தாய் உறவாய் வாழ்கின்றார். (மேசையைத் தட்டும் ஒலி)

மாண்புமிகு அம்மா அவர்களின் 66-வது பிறந்த நாளையொட்டி இரத்த தானம் செய்கின்றோம் என்று போக்குவரத்துத் தொழிலாளர்களும், அவர்தம் குடும்பத்தினரும் இலட்சம் பேர் திரண்டார்கள்.

 

போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஆர்வத்திற்கு அணை போடாமல் செயல்வடிவம் கொடுக்க களம் இறங்கினர் போக்குவரத்துத் துறையினர்.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்: பேரவையின் முன்னனுமதியுடன் அலுவல் நேரம் நீட்டிக்கப்படுகிறது.

மாண்புமிகு திரு. வி. செந்தில்பாலாஜி: சென்னை, விழுப்புரம், வேலூர், சேலம், கோயம்புத்தூர், கரூர், திருச்சி, கும்பகோணம், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் 14-2-2014 அன்று மாபெரும் இரத்த தான முகாம்கள் அமைக்கப்பட்டன. மாண்புமிகு அம்மா அவர்களின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற இந்த உயிர் காக்கும் முகாமுக்கு 'நாங்களும் உறுதுணையாக இருப்போம்' என்று படை திரண்டனர் மாணவக் கண்மணிகளும், இளைஞர்களும். கட்டுக்கடங்காத கூட்டத்தால் 10 மணி நேரத்தில் 53,129 பேரிடம் மட்டுமே இரத்த தானம் பெறப்பட்டது. (மேசையைத் தட்டும் ஒலி) இது யாராலும் நிகழ்த்த முடியாத சாதனை. இதுவே 24 மணி நேரம் என்றால், இலட்சத்தைத் தாண்டியிருக்கும் இச்சாதனை. ஆம், உண்மையில் இது கின்னஸ் சாதனை, உலக சாதனை.

'எந்த ஒரு செயலையும் உளப்பூர்வமாக, உணர்வுப்பூர்வமான ஈடுபாட்டுடன் செய்தால் அச்செயல் சாதனையாக மாறும்' என்பது மாண்புமிகு அம்மா அவர்கள் எங்களுக்குக் கற்றுத்தந்த பாடம். (மேசையைத் தட்டும் ஒலி) உலகத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் தலைவர்களாக கார்ல் மார்க்ஸ், லெனின், மாசே துங், ஃபிடல் காஸ்டிரோ, சேகுவேரா போன்ற பலர் தோன்றினர். ஆனால் எவர் பின்னாலும் குருதிக் கொடையளிக்க குடும்பம், குடும்பமாக இத்தனை இலட்சம் பேர் எங்கும் திரண்டது இல்லை. மாண்புமிகு அம்மா அவர்கள் ஆணையிடாமலே மாண்புமிகு அம்மா அவர்களின் பிறந்த நாள் அகிலத்தின் சிறந்த நாளாய்த் திகழ்ந்து உலக சாதனையாக பதிவாகியது. (மேசையைத் தட்டும் ஒலி) இந்த உலக சாதனையை அங்கீகரிக்கும் வகையில் கடந்த 17-2-2014 அன்று தலைமைச் செயலகத்தில் தியாகத் திருவடிவாம் மாண்புமிகு அம்மா அவர்களை கின்னஸ் அமைப்பின் பிரதிநிதி திருமதி லூசியா அவர்கள் சந்தித்து கின்னஸ் சாதனைக்கான சான்றிதழை வழங்கினார்கள். அந்நாள் எங்கள் வாழ்வின் ஆனந்தத் திருநாள். (மேசையைத் தட்டும் ஒலி) எனக்கு மட்டுமல்ல, போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள், மாணவக் கண்மணிகள், இளைஞர்கள் என அனைவருக்கும் இன்பத் திருநாள் என்பதை இந்த அவையிலே தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, 'நீர்இன்று அமையாது உலகு'. உலக இயக்கத்திற்கு நீர்தான் முக்கியமானது. உலகில் உள்ள தண்ணீரின் அளவு 97.5 சதவிகிதம். ஆனால் அத்தனையும் குடிப்பதற்கு உகந்த நீரல்ல. 2.5 சதவிகிதம்தான் உலக மக்களுக்கு உதவும் நீராக உள்ளது. மனித உடலில்கூட பாதிக்குமேல் நீர்தான் உள்ளது. அதனால்தான் நதிகளைத் தாயாகக் கருதி, 'அம்மா' என்று அன்பொழுக அழைத்து மகிழ்கின்றனர் தமிழர்கள். பாக்கெட் தண்ணீராகவும், பாட்டில் தண்ணீராகவும் புற்றீசல்போல புதிது, புதிதாய் விற்பனைக்கு வந்த மாசு நிறைந்தத் தண்ணீரைப் பார்த்து, நோயிலிருந்து மக்களைக் காத்திட, பேருந்து பயணிகளுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்கிடவேண்டுமென்று ஒரு லிட்டர் பாட்டில் ரூ.10/- என குறைந்த விலையில் பாதுகாப்பான 'அம்மா குடிநீர்' உற்பத்தி நிலையத்தினைத் திறந்து வைத்து (மேசையைத் தட்டும் ஒலி) அதன் விற்பனையையும் தனது திருக்கரங்களால் பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த நாளான 15-9-2013 அன்று மாண்புமிகு அம்மா அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.

'அம்மா குடிநீர்' மொத்தம் 234 தொகுதிகளுக்குட்பட 304 விற்பனை மையங்கள் மூலம், சென்னையிலுள்ள பேருந்து நிலையங்களிலும், மாவட்டங்களிலுள்ள புறநகர் பேருந்து நிலையங்களிலும் விநியோகம் செய்யப்படுகின்றன. தொடங்கிய நாள் முதல் ஜூன் 2014 வரை மொத்தம் 3,20,29,546 லிட்டர் தண்ணீர் பேருந்து பயணிகள் பயன்படுத்தியிருக்கின்றார்கள். (மேசையைத் தட்டும் ஒலி)

ரூ.12 இலட்சம் கோடி அளவிற்கு வரவு செலவு நிருவாகம் செய்யக்கூடிய மத்திய இரயில்வே துறையில் ரூ.15-க்கு குறைவாக குடிநீர் வழங்கமுடியவில்லை. அதிலும் மத்திய இரயில்வே துறை 2009 ஆம் ஆண்டு 'இரயில் நீர்' திட்டத்தைத் தொடங்கும்போது, மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த தி.மு.க. மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தது. 2009 ஆம் ஆண்டில் மத்திய இரயில்வே துறை ரூ.15-க்கு 'இரயில் நீர்' திட்டம் தொடங்கியபோது தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்ததா என்றால் இல்லை.

இன்று மாண்புமிகு அம்மா அவர்களுடைய சிந்தனையில் உதித்த திட்டமான அம்மா குடிநீர் மக்களிடத்தில் பெற்ற வரவேற்பைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசிப் பார்த்தார்கள்.

'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்றும் 'காமாளைக் கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சள்' என்றும் கிராமத்தில் சொல்வார்கள். அதுபோலத்தான் மக்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற 'அம்மா குடிநீர்' திட்டத்தை குறுகிய மனப்பான்மையோடு பார்க்கிறவர்களுக்கும் தெரிந்தது.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, சின்னதாய் ஒரு பேருந்து, அதற்கு அம்மா வைத்த பெயர் சிற்றுந்து; மகிழுந்து போலவே பயணியர் மனசுக்கும் மகிழ்ச்சி தரும் சீருந்து; கட்டணம் அதிகம் இல்லை, குறைவுதான்; சேவை குறைவு இல்லை, நிறைவுதான்; வாகனம் போவதென்ன விரைவுதான்; வழி நெடுக ஏறும் கூட்டம் மிகுதிதான்; வாகனத்தைச் சீராக ஓட்டிச் செல்ல சிறந்த ஓட்டுநர், பயணிகளைப் பரிவுடனே ஏற்றிச் செல்ல சிறந்த நடத்துநர்; அம்மா தந்த வாகனம், அழகு மிகுந்த வாகனம்; பக்கங்கள் இரண்டிலும் பசுமை ஓவியம் படர்ந்திருக்கும் சிறந்த வாகனம். (மேசையைத் தட்டும் ஒலி)

(மாண்புமிகு பேரவைத் தலைவர் தலைமை)

சென்னை மாநகரில் அரசுப் பேருந்துகள் தடம் பதிக்க முடியாத இடங்களில் வாழும் மக்களின் நன்மையைக் கருதி, சென்னை மாநகரில் போக்குவரத்து வசதி கிடைக்கப்பெறாத மூலை முடுக்குகளிலும், இண்டு இடுக்குகளிலும், குடிசைப் பகுதிகளுக்கும் சென்றுவரும் வகையில் சிற்றுந்து சேவையை 23-10-2013 அன்று முதல் கட்டமாக 50 சிற்றுந்துகள் மாண்புமிகு அம்மா அவர்களின் திருக்கரங்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

 

அதேபோல், மக்களின் தேவையை உணர்ந்து மேலும் 50 சிற்றுந்துகளை மாண்புமிகு அம்மா அவர்கள் தொடங்கி வைத்தார்கள். சென்னை மாநகரில் சிற்றுந்துகளின் சேவை மூலமாக அதிக வருவாயை ஈட்டி, அதிகமான அளவில் பயணிகளை ஏற்றிச் சென்று பேருந்துகள் சேவை செய்திருக்கின்றன.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் பேருந்துகள் இயக்கப்படும் மாநிலம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி நடத்தும் தமிழ்நாட்டில் மட்டும்தான் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)

காங்கிரஸ் ஆளும் மகாராஷ்டிராவில் ஒரு கிலோ மீட்டருக்குப் பேருந்து கட்டணம் 90 பைசா; கேரளாவில் ஒரு கிலோ மீட்டருக்குப் பேருந்து கட்டணம் 64 பைசா; அதே கேரளாவில் 8-3-2010 ஆம் ஆண்டு சி.பி.எம். ஆட்சியில் இருக்கின்றபோது ஒரு கிலோ மீட்டருக்குப் பேருந்து கட்டணம் 55 பைசா; கர்நாடகாவில் ஒரு கிலோ மீட்டருக்குப் பேருந்து கட்டணம் 59.75 பைசா; ஆந்திராவில் ஒரு கிலோ மீட்டருக்குப் பேருந்து கட்டணம் 59 பைசா மற்றும் குஜராத்தில் ஒரு கிலோ மீட்டருக்குப் பேருந்து கட்டணம் 58.41 பைசாவாகும். ஆனால், அன்னைத் தமிழகத்தில் தமிழர் நலன் காக்கும், புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வழங்கும் பல்வேறு நிதியுதவிகளால் ஒரு கிலோ மீட்டருக்குப் பேருந்து கட்டணம் 42 பைசா மட்டுமே. (மேசையைத் தட்டும் ஒலி)

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, முந்தைய தி.மு.க. ஆட்சியில் விட்டுச்சென்ற பெரும் நிதிச் சுமையைச் சமாளிக்க, மாண்புமிகு அம்மா அவர்கள், 2011-2014 ஆகிய மூன்றாண்டுகளில் போக்குவரத்துக் கழகங்களுக்கு அளித்த நிதியினுடைய விவரம். டீசல் விலை உயர்வின் காரணமாக, மூன்றாண்டுகளில் வழங்கியிருக்கின்ற மானியம் ரூ.1,281 கோடி; ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கிட ரூ.178 கோடி; விபத்து இழப்பீடு வழங்கக் கடன் ரூ.25 கோடி; பேருந்துகளுக்குக் கூண்டு கட்ட மற்றும் நீதிமன்றத்தில் பிணையிலிருக்கும் பேருந்துகளை மீட்பதற்கு; பங்கு மூலதன நிலுவையை சரிசெய்வதற்கு; ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகை வழங்குவதற்கென, இப்படி 2,833 கோடி ரூபாய் நிதியை மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் மூன்றாண்டுகளில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கி, (மேசையைத் தட்டும் ஒலி) போக்குவரத்துக் கழகங்களையும், தொழிலாளர்களையும், மக்களையும் காத்திருக்கின்ற கடவுள் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில், அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் இயக்க வருவாய் 2009-2010 ஆம் ஆண்டு 5,264 கோடியே 3 இலட்சத்திலிருந்து, 2010-2011 ஆம் ஆண்டு 5,163 கோடியே 58 இலட்சமாகக் குறைந்தன. இதுதான் தி.மு.க. ஆட்சியின் சாதனை. மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய சீரிய நடவடிக்கையால், அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் இயக்க வருவாய் முறையே 2011-2012 ஆம் ஆண்டு 5,991 கோடியே 3 இலட்சம்; 2012-2013 ஆம் ஆண்டு 7,252 கோடியே 40 இலட்சம்; 2013-2014 ஆம் ஆண்டு 7,337 கோடியே 98 இலட்சமாக உயர்ந்திருக்கின்றன.

அதேபோல, அரசுப் பேருந்துகளில் விளம்பரம் செய்கின்ற அந்த விளம்பர வருவாய் என்பது கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியைவிட, புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய பொற்கால ஆட்சியில் உயர்ந்திருக்கின்றன. கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில், 2009-2010 ஆம் ஆண்டு அரசுப் பேருந்துகளில் விளம்பர வருவாய் ரூபாய் 12 கோடியே 85 இலட்சமாக இருந்தது. 2010-2011 ஆம் ஆண்டு விளம்பர வருவாய் ரூபாய் 11 கோடியே 32 இலட்சமாகக் குறைந்தன. மாண்புமிகு அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியில், வெளிப்படையான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதன் காரணமாக, அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் விளம்பர வருவாய் ஆண்டுக்காண்டு உயர்ந்துள்ளன. 2011-2012 ஆம் ஆண்டு விளம்பர வருவாய் ரூபாய் 12 கோடியே 83 இலட்சம்; 2012-2013 ஆம் ஆண்டு விளம்பர வருவாய் ரூபாய் 16 கோடியே 13 இலட்சம்; 2013-2014 ஆம் ஆண்டு விளம்பர வருவாய் ரூபாய் 16 கோடியே 37 இலட்சமாக உயர்ந்திருக்கின்றன. (மேசையைத் தட்டும் ஒலி)

போக்குவரத்துக் கழகங்களின் நிதிச் சுமையைக் குறைக்க, மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து இதர வருவாயையும் பெருக்கியிருக்கின்றது. விளம்பர வருவாய், குடிநீர் வருவாய், பயணவழி உணவகங்கள், வணிக வளாகங்கள் என பல்வேறு வகைகளிலே இதர வருவாயைப் பெருக்குவதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் உத்தரவிட்டு, சிப்பஞ்சல் மற்றும் தூதஞ்சல் சேவைகள் மூலமாக, 2011-2013 ஆம் ஆண்டுகளில் ரூபாய் 44 இலட்சத்து 31 ஆயிரமும், 2013-2014 ஆம் ஆண்டில் ரூபாய் 52 இலட்சத்து 10 ஆயிரமும் வருவாயை ஈட்டியுள்ளது. பயணிகளின் வசதிக்காக 37 இடங்களில் பயணவழி உணவகங்களின்மூலமாக, 2011-2013 ஆம் ஆண்டுகளில் 4 கோடியே 67 இலட்ச ரூபாய் வருவாய் ஈட்டின. 2013-2014 ஆம் ஆண்டில் 4 கோடியே 28 இலட்ச ரூபாய் ஓராண்டில் மட்டும் இந்த உணவகத்தின்மூலமாக வருவாயை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ஈட்டியிருக்கின்றது.

மின்னணு தொழில்நுட்ப முறையில் ஏலம் விடுகின்ற புதிய திட்டத்தினை 1-10-2011 அன்று மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள். இந்தத் திட்டத்தின் வாயிலாக, 2011-2012 ஆம் ஆண்டில் 1 கோடியே 97 இலட்ச ரூபாயாக இருந்த இந்த வருவாய், 2013-2014 ஆம் ஆண்டில் 30 கோடியே 72 இலட்ச ரூபாயாக இந்த வருவாய் உயர்ந்திருக்கின்றது. (மேசையைத் தட்டும் ஒலி)

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பண்டிகை என்றால் மக்களுக்குச் சொந்த ஊர் செல்ல பயம். அதுவும் தீபாவளி, பொங்கல் பண்டிகை என்றால் மக்கள் தங்களுடைய சொந்த ஊருக்குச் செல்ல கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் பயம். காரணம், வேலையை முடித்துவிட்டு கோயம்பேடு பேருந்து நிலையம் சென்றால் பேருந்து இருக்காது. விடிய, விடிய காத்திருக்க வேண்டும்.

 

விடியற்காலை தடியடி நடக்கும். தீபாவளி தீராத வலியாகிவிடும். இதுதான் கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் சொந்த ஊர் சென்று பண்டிகை கொண்டாட நினைப்பவர்களின் நிலை. காரணம், கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சி.ஐ.டி. காலனிக்கும், கோபாலபுரத்திற்கும் போக்கும் வரத்துமாக இருந்தாரே தவிர, ஐந்தாண்டுகளில் ஒரு நாள்கூட பேருந்து நிலையத்திற்குச் சென்றாரா என்றால், கிடையாது. (மேசையைத் தட்டும் ஒலி) ஆனால், மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களுடைய பொற்கால ஆட்சியில், பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் சொந்த ஊருக்குச் செல்ல சிறப்புப் பேருந்துகள், சிறப்பு முன்பதிவு மையங்கள், சிறப்புப் பணியில் அலுவலர்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் முகாமிட்டிருந்தனர். எந்நேரமும் கோயம்பேடுக்கு வரலாம், சொந்த ஊருக்குச் செல்லலாம் என்ற நிலையை உருவாக்கியவர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள். (மேசையைத் தட்டும் ஒலி)

பண்டிகைக் காலங்களில் சொந்த ஊருக்குச் செல்பவர்கள் ஆன்லைன்மூலம் முன்பதிவு செய்தனர். இந்தத் திட்டத்தை தமிழக மக்களுக்கு வழங்கியிருக்கின்ற தாய் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். இந்தத் திட்டத்தின் மூலமாக, பல்வேறு நிலைகளிலே பயணிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து, வருவாயும் உயர்ந்திருக்கின்றது.

2011, 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளிலே பார்க்கின்றபோது, 2012 ஆம் ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கு முன்பதிவு செய்தவர்கள் 1,90,299 பேர்; 2013 தீபாவளிப் பண்டிகைக்கு முன்பதிவு செய்தவர்கள் 2,24,719 பேர். (மேசையைத் தட்டும் ஒலி) இதன்மூலம் ஏழு கோடியே ஒரு இலட்சம் ரூபாய் போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாய் கிடைத்துள்ளது. 2012 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு சிறப்புப் பேருந்துகளுக்கு ஆன்லைன்மூலம் முன்பதிவு செய்தவர்கள் 1,38,436 பேர். அதன்மூலம் போக்குவரத்துக் கழகத்திற்கு 4.4 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. 2013 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு சிறப்புப் பேருந்துகளுக்கு முன்பதிவு செய்தவர்கள் 2,27,291 பேர். அதன்மூலம் போக்குவரத்துக் கழகத்திற்கு 7.27 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. 2014 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு முன்பதிவு செய்த பயணிகள் 2,33,182 பேர். அதன்மூலம் போக்குவரத்துக் கழகங்கள் 7.56 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளன. ஏற்றம், முன்னேற்றம் என எதிலும் முன்னேற்றப் பாதையில் மாண்புமிகு அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி நடைபெற்று வருகின்றது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, குழு முன்பதிவில் 10 சதவீதம் கட்டணச் சலுகை மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய பொற்கால ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்டு, அம்மா அவர்கள் வழங்கியிருக்கின்ற இந்த சிறப்பான திட்டத்தின்மூலம் மாண்புமிகு அம்மா அவர்களுடைய திருக்கரங்களால் தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டத்தின்மூலம், இதுவரை 63,755 பயணிகள் 4,920 குழுவாகப் பயணம் செய்தனர். இதில் 10 சதவீதம் சட்டணக் கழிவு சலுகையின்மூலம் 18,80,832 ரூபாய் பயனடைந்துள்ளனர். இந்தக் குழு முன்பதிவுப் பயணத்தின்மூலம் அரசுப் போக்குவரத்துக் கழகம் 1,69,27,488 ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர்கள் பேருந்துகள் கூடுதல் இயக்கம் என்பது, சென்னை மாநகரில் நெரிசல் நேரத்தில் சிறப்புப் பேருந்துகளை இயக்க வேண்டுமென்று, தொலைநோக்குப் பார்வையோடு, மக்களுக்கு சிறப்பான வசதிகளைச் செய்ய வேண்டும் என்பதற்காக, சென்னையில் இயங்கிவந்த 134 பேருந்துகளை 200 ஆக உயர்த்தி, மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 20-6-2013 அன்று தங்களுடைய திருக்கரங்களால் மக்களுக்கு வழங்கியிருக்கின்றார்கள். (மேசையைத் தட்டும் ஒலி) அதன் பலனாக, 134 பேருந்துகளிலிருந்து 200 பேருந்துகளாக மகளிர் மற்றும் சிறுவர்கள் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, குடும்ப வருமானத்திற்குக் குந்தகம் வருகிறதென்றால், காலையில் ஓடிப்போய் கவர்னர் மாளிகைக் கதவைத் தட்டுவார்; மகனுக்கும், மகளுக்கும், பேரனுக்கும் பதவி வேண்டுமென்றால், தர்ணாகூட நடத்துவார்; கோட்டையில் அமர்ந்து கோப்புகளைப் பார்க்காமல், கோடம்பாக்கம் ஸ்டுடியோவிற்குச் சென்று, திருட்டு லாட்டரிக் கூட்டத்தோடு சேர்ந்து காசுக்காக கதை வசனம் எழுதுவார்; இவ்வளவு இடத்திற்கும் போனவர், உள்ளங்கை ரேகையும் தேயத் தேய உழைக்கின்ற தொழிலாளர்களின் போக்குவரத்துப் பணிமனைக்கு மைனாரிட்டி ஆட்சி நடத்திய கருணாநிதி எப்போதும் சென்றதுண்டா? ஏழைத் தொழிலாளர்களின் ஏக்கங்கள் என்னவென்று கேட்டதுண்டா? ஆனால், மூன்றாண்டு காலத்திற்குள் நான்கு முறை மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பணிமனைக்கு வருகை தந்து, (மேசையைத் தட்டும் ஒலி) உழைப்பாளிகளுக்கு உற்சாகமூட்டிய தொழிலாளர் வர்க்கத்தின் பாதுகாவலரே எங்கள் அம்மா அவர்கள்தான்.

பணிமனைக்கு வந்தது மட்டுமல்ல, அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கையை உயர்த்த, புதிய பணிமனைகள் அமைக்க மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், மூன்றாண்டுகளில் மட்டும் 68 புதிய பணிமனைகள் அமைக்கப்பட்டன. முந்தைய ஐந்தாண்டுக்கால ஆட்சியில் தொடங்கப்பட்ட பணிமனைகளின் எண்ணிக்கை வெறும் 10.

தூத்துக்குடி, நாகப்பட்டினம், ஊட்டி மற்றும் கரூர் ஆகிய நான்கு மண்டலங்களை இந்த மூன்றாண்டுகளில் மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நிருவாக நலன் கருதி வழங்கியிருக்கின்றார்கள்.

அதேபோல, ஸ்ரீரங்கம் மற்றும் வேலூர் ஆகிய புதிய அரசுப் போக்குவரத்துக் கழகக் கோட்டங்களை உருவாக்க குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு இப்பொழுது அறிக்கை தயார் செய்துகொண்டிருக்கிறது என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அரசுப் போக்குவரத்துக் கழகத்தினுடைய வருவாய் இனங்கள். 2010-2011-ல் இயக்க வருவாய் 5,198 கோடி ரூபாய்; இதர வருவாய் 153 கோடி ரூபாய்; பேருந்து பயண அட்டை வருவாய் 421 கோடி ரூபாய்.

அதேபோல, 2010-2011 ஆம் ஆண்டினுடைய செலவினங்கள். டீசல் 2,468 கோடி ரூபாய்; ஷிஜீணீக்ஷீமீ றிணீக்ஷீts 339 கோடி ரூபாய்; சம்பளம் 2,723 கோடி ரூபாய்; பணிக்கொடை 141 கோடி ரூபாய்; தொழிலாளர் நலன் 357 கோடி ரூபாய்; வட்டி 247 கோடி ரூபாய்; சுங்க வரி 37 கோடி ரூபாய்; மோட்டார் வரி தேய்மானம் 992 கோடி ரூபாய்; ஆக மொத்தம் 7,309 கோடி ரூபாய்.

பிற்பகல் 2-15

இயக்க வருவாய் - 2013-2014 ஆம் ஆண்டினுடைய இயக்க வருவாய் ரூ.7,344 கோடி. இதர வருவாய் ரூ.169 கோடி. பேருந்துப் பயண அட்டை வருவாய் ரூ.652 கோடி. அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ரூ.8,166.59 கோடி மொத்த வருவாய் ஈட்டியுள்ளன.

2013-2014 அம் ஆண்டின் செலவினங்கள் - டீசல் ரூ.3,629 கோடி, ஷிஜீணீக்ஷீமீ ஜீணீக்ஷீts ரூ. 466 கோடி. சம்பளம் 3,863 கோடி. பணிக்கொடை ரூ.231 கோடி, தொழிலாளர் நலன் 395 கோடி. வட்டி 468 கோடி. சுங்க வரி ரூ.118 கோடி. மோட்டார் வரி தேய்மானம் ரூ.1,002 கோடி.

2010-2011 முதல் 2013-2014 வரையிலான மூன்று ஆண்டு இடைவெளியில் ரூ.2,374 கோடி இயக்க வருவாய் உயர்ந்திருக்கின்றன. இதர வருவாய் உயர்வு ரூ.15.65 கோடி. ஆக மொத்தம் ரூ.2,392 கோடி வருவாயை ஈட்டியுள்ளன.

2010-2011 முதல் 2013-2014 ஆகிய மூன்று ஆண்டுகள் இடைவெளியில் மொத்த செலவினம் ரூ.2,671 கோடி உயர்ந்திருக்கின்றன. இப்படி உயர்வுக்கு ஏற்ப, அரசுப் போக்குவரத்துக் கழகங்களினுடைய நிதி நிலையைச் சமாளிக்க வேண்டும் என்பதற்காக, மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தொடர்ந்து நிதிகளை வழங்கி, போக்குவரத்துக் கழகத்தையும், தொழிலாளர்களையும் இன்று புரட்சித் தலைவி அம்மா அவர்கள் காப்பாற்றி வருகின்றார்கள்.

"முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறைஎன்று வைக்கப் படும்"

என்ற திருவள்ளுவரின் கூற்றினை மெய்ப்பித்து, முறை செய்து அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை இயக்கவும், நல்லமுறையில் பராமரிக்கவும் மாண்புமிகு அம்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். நல்ல முறையில் இயக்குவதால், செயல்பாட்டுத் திறன் முன்னேற்றம் அடைந்துள்ளன.

2010-2011-ல் இயக்கப் பேருந்துகள் 19,110. 2013-2014-ல் இயக்கப் பேருந்துகள் 20,684. 2010-2011-ல் ஒரு நாளைய இயக்க தூரம் 87.59 இலட்சம் கிலோமீட்டர். 2013-2014-ல் ஒரு நாளைய இயக்க தூரம் 91.20 இலட்சம் கிலோ மீட்டர்.

இருக்கைகள் நிரப்பு விகிதம் - 2012-2013 ஆம் ஆண்டில் மாநகர் மற்றும் நகரப் பேருந்துகளில் 67.87 சதவிகிதமாகும். இதுவே 2013-2014 ஆம் ஆண்டில் 68.03 ஆக உயர்வு. 2012-2013 ஆம் ஆண்டில் விரைவுப் பேருந்துகளில் 79.83 சதவிகிதம். 2013-2014 ஆம் ஆண்டில் 80.38 ஆக உயர்ந்திருக்கின்றன.

மாண்புமிகு டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 6,000 புதிய பேருந்துகளை வாங்க உத்தரவிட்டு, 4,642 பேருந்துகள் மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களின் திருக்கரங்களால் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டு, இன்று மக்களின் பயன்பாட்டிற்கான சேவையைச் செய்து கொண்டிருக்கின்றன.

மூன்று ஆண்டுகளில் மட்டும் 1,436 புதிய வழித்தடங்களை மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் வழங்கியிருக்கின்றார்கள்.

100 சிற்றுந்துகள்மூலம் 40 வழித்தடங்கள் என இந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சிற்றந்துகளின் வழித்தடங்களோடு சேர்த்து 1,476 புதிய வழித்தடங்களில் மக்களுடைய பயன்பாட்டிற்காக மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களால் பேருந்துகள் விடப்பட்டிருக்கின்றன. (மேசையைத் தட்டும் ஒலி)

நான் ஏற்கெனவே சுட்டிக்காட்டியதைப் போல, இயக்கப் பேருந்துகளின் பழுது நீக்கம் என்பது, 2006 முதல் 2011 வரையிலான ஐந்து ஆண்டுகளில் 63,633. இந்த மூன்று ஆண்டுகளில் இயக்கத்தின்போது ஏற்பட்ட பழுது மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் சீரிய நடவடிக்கைகளினால் 6,592 ஆகக் குறைந்துள்ளது.

அதேபோல, விபத்துக்களை ஒப்பிட்டுப் பார்க்கின்றபோதும், முந்தைய ஐந்தாண்டுக்கால மைனாரிட்டி ஆட்சிக் காலத்தில் சரியான முறையில் பராமரிக்காமல், பேருந்துகளை முழுமையாக பராமரிக்காமல், சுத்தம் செய்யாமல் இயக்கப்பட்டதன் காரணமாகத்தான் இந்த விபத்துக்கள் அதிகமாக ஏற்பட்டன. ஆனால், புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சரியான முறையில் பேருந்துகளைப் பராமரித்து, சுத்தம் செய்து மக்களுக்கு சேவையாற்றக்கூடிய பேருந்துகளாக, முழுமையாகச் செல்லவேண்டுமென்று ஆணையிட்டு, அந்தப் பராமரிப்பின் காரணமாக, 2011-2014 ஆம் ஆண்டில் மூன்று ஆண்டுகளில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் விபத்துக்களினுடைய எண்ணிக்கை 20,339. ஆனால், ஐந்து ஆண்டுக்கால தி.மு.க. ஆட்சியில் 41,163 ஆக இருந்தன.

விபத்துகளில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 3,657 ஆக இருந்தது. அதேபோல, மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் சீரிய திட்டங்களால் அதனுடைய சதவிகிதம் என்பது ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக குறைந்து வருகின்றன என்பதை மாண்புமிகு உறுப்பினர்களுக்கு மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களின் வாயிலாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முழு உடல் பரிசோதனைத் திட்டம். மழையில் நனைந்து கொண்டு வீட்டிற்கு வரும் மகனைப் பார்த்து, அப்பா கேட்டார் 'அறிவு இல்லை, குடையை எடுத்துக்கொண்டு போயிருக்கலாமே' என்று. அண்ணன் கேட்டான் 'மழை வருகிறது, நின்று விட்டு வர வேண்டியதுதானே' என்று. தம்பி சொன்னான் 'இரண்டு நாட்கள் மழை பெய்யும் என்று இரமணன் சொன்னதால் விடுப்பு எடுக்க வேண்டியதுதானே' என்று. ஆனால், தாய் மட்டும் 'மழையில் நனைந்தவனை துவட்டுவதற்குத் துண்டு எடுத்துக்கொடுத்து, தலையை துவட்டிவிட்டு, சுக்கு காப்பி கொடுத்து பிள்ளையைப் பாதுகாத்தார்'. மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள்தான் தாயாக இருந்து போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் உடல் நலனில் தனிக் கவனம் செலுத்தி வருகிறார்கள். (மேசையைத் தட்டும் ஒலி)

 

போக்குவரத்துத் தொழிலாளர்கள் பணித்தன்மை காரணமாக, அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் விதமாகவும், உரிய நேரத்தில் உரிய சிகிச்சை பெறுவதற்கு ஏதுவாகவும், 45 வயதிற்கு மேற்பட்ட அனைத்து ஓட்டுநர்களுக்கும் இலவசமாக பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளும் திட்டத்தை 2012 ஆம் ஆண்டு மாண்புமிகு அம்மா அவர்கள் அறிவித்தார்கள். அதைத் தொடர்ந்து 2012-2013 ஆம் ஆண்டில், 21,885 ஓட்டுநர்கள் முழு உடல் பரிசோதனை செய்து பலனடைந்துள்ளார்கள். தொழிலாளர்களைக் காக்கின்ற தெய்வம், காக்கும் கடவுள் புரட்சித் தலைவி அம்மா என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) பின்னர், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள், இந்தத் திட்டம் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் விரிவுபடுத்தப்படும் என்று 2-7-2014 அன்று ஆணையிட்டதன்பேரில் 24,643 பேர் பயனடைந்துள்ளனர். தொடர்ந்து இந்தத் திட்டத்தின் மூலமாக 45 வயதிற்கு மேற்பட்ட அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அனைத்துத் தொழிலாளர்களும் பயன் பெற்று வருகின்றனர். மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இந்தியாவிலேயே முதன்முறையாக போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கென்று, அவர்களுடைய உடலை பரிசோதித்துக் கொள்வதற்கு என்று 45 வயதிற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்கியிருக்கின்ற இந்த சீரிய திட்டம் தொழிலாளர்கள் மத்தியில் ஒரு மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி)

போக்குவரத்துக் கழகங்களின் வளர்ச்சியில் தனி கவனம் செலுத்தி வரும் மாண்புமிகு அம்மா அவர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் வாழ்வில் வளம் பெற வேண்டும் என்கின்ற உயரிய நோக்கத்தில், 23-10-2013 என்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற மிகப் பெரிய விழாவில் கலந்துகொண்டார்கள். அவ்விழாவில், மாண்புமிகு அம்மா அவர்கள், 52,557 ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு, தி.மு.க. ஆட்சியில் வழங்கப்படாமல் இருந்த வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை மற்றும் விடுப்பு ஒப்படைப்புத் தொகையையும் சேர்த்து 257 கோடி ரூபாய்க்கான காசோலைகளை தங்களுடைய திருக்கரங்களால் நேரில் வழங்கி கௌரவித்தார்கள்.

அதேபோன்று, மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள், ஓட்டுநர்கள் 7,049-ஐயும், நடத்துநர்கள் 8,406-ஐயும், ஓட்டுநர் உடன் நடத்துநர்கள் 1,538-ஐயும், தொழில்நுட்பப் பணியாளர்கள் 2,388-ஐயும் புதிதாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்று ஆணையிட்டார்கள். அதன்படி, பணி நியமனம் செய்யப்பட்ட அவர்கள், இன்று தங்களுடைய பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு, நீண்ட நாட்களாக கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் பணி வரன்முறை செய்யப்படாமல் இருந்த 349 வாரிசுதாரர்கள், 5,768 பதிலி நடத்துநர்கள் மற்றும் 5,897 பதிலி ஓட்டுநர்கள் ஆகியோரின் பணிகள் வரன்முறை செய்யப்பட்டுள்ளன.

பதவி உயர்வு. கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் உழைக்கின்ற தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டனர். ஆனால், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய ஆட்சியில்தான் உழைக்கின்ற தொழிலாளர்கள் தங்கள் உழைப்பிற்கு ஏற்ப பதவி உயர்வு பெற வேண்டும் என்ற சீரிய சிந்தனையோடு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாண்புமிகு அம்மா அவர்கள் இந்த மூன்று ஆண்டுகளில் வழங்கியிருக்கின்ற பதவி உயர்வுகளின் எண்ணிக்கை, கடந்த மைனாரிட்டி தி.மு.க ஆட்சியின்போது வழங்கப்பட்ட பதவி உயர்வுகளின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப்பார்க்கின்றபோது ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது; பதவி உயர்வு பெறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. 2008-2009 ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் 1,184 தொழிலாளர்கள் பதவி உயர்வினைப் பெற்றனர். அது, 2009-2010 ஆம் ஆண்டில் 876 ஆகக் குறைந்தன. 2010-2011 ஆம் ஆண்டில் 876 ஆக அப்படியே இருந்தன. ஆனால், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய பொற்கால ஆட்சியில், 2011-2012 ஆம் ஆண்டில் 1,039 பேருக்கு பதவி உயர்வும், 2012-2013 ஆம் ஆண்டில் 1,276 பேருக்கு பதவி உயர்வும், 2013 ஆம் ஆண்டில் 1,564 பேருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டன. உழைக்கின்ற தொழிலாளர்களுக்கு பதவி உயர்வினை வழங்கி அவர்களைக் கௌரவித்து, உழைப்பிற்கு அங்கீகாரம் தந்திருக்கின்ற முதலமைச்சர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் என்பதை இந்தப் பேரவையில் அன்போடு தெரிவித்துக்கொள்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி)

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பணிமனைகள் புனரமைப்பு, தொழிலாளர்களுடைய ஓய்வறைகள் மேம்பாடு போன்ற பல்வேறு நிலைகளில் பணிகளை செய்ய உத்தரவிட்டு, இந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 16 கோடியே 84 இலட்சம் ரூபாயை மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் ஒதுக்கினார்கள். தற்போது அந்தப் பணிகள் நிறைவு பெற்றிருக்கின்றன. ஓய்வறைகள் மேம்பாடு, பணிமனைகள் மேம்பாடு என்ற பல்வேறு நிலைகளில் அந்தப் பணிகள் சிறப்பாக நடைபெற்றிருக்கின்றன.

அதேபோன்று, மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள், சீருடை மற்றும் காலணிகள் வழங்குவதில் முந்தைய காலங்களில் இருந்த நடைமுறையை இரட்டிப்பாக்கி வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். 2 வருடத்திற்கு 3 ஜோடி காலணிகள் அல்லது 1 ஜோடி ஷு என்று இருந்ததை மாற்றி, போக்குவரத்துத் தொழிலாளர்களின் நலன் கருதி, மாண்புமிகு அம்மா அவரகள் 3-5-2013 முதல் 1 வருடத்திற்கு 2 செட் சீருடை என்பது 4 செட்டாக உயர்த்தி தொழிலாளர்களுக்காக வழங்கியிருக்கின்ற தாய் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள். (மேசையைத் தட்டும் ஒலி) அதேபோன்று, 2 வருடத்திற்கு 3 ஜோடி காலணி அல்லது 1 ஜோடி ஷு என்பதை 1 வருடத்திற்கு 2 ஜோடி காலணி அல்லது 1 ஜோடி ஷு என்று உயர்த்தி மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வழங்கியிருக்கின்றார்கள். தொழிலாளர்கள் நலன் கருதி, மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வழங்கியிருக்கின்ற இத்திட்டத்தின் மூலமாக தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றார்கள். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான நிதிகள் என்பதில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தனி கவனம் செலுத்தி, அவர்களுக்குத் தேவையான நிதிகளைத் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

 

கடந்த 5 ஆண்டு கால மைனாரிட்டி தி.மு.க ஆட்சியில் வழங்கப்பட்ட ஒட்டுமொத்தத் தொகை ரூ.928.86 கோடியாகும். இந்த மூன்றாண்டுகளில் தி.மு.க. ஆட்சியைக் காட்டிலும் அதிகமாக ரூ.1,016.38 கோடியை மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் தாயுள்ளத்தோடு வழங்கியிருக்கின்றார்கள். (மேசையைத் தட்டும் ஒலி)

விபத்தின்றி பணிபுரிகின்ற ஓட்டுநர்களுக்கு வெகுமதி வழங்கும் திட்டம் மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களால் அறிவிக்கப்பட்டு, 2011-2012 மற்றும் 2012-2013 ஆம் ஆண்டுகளில் மட்டும் ரூ.5.56 கோடி ஒதுக்கப்பட்டு, 55,240 ஓட்டுநர்களுக்கு வெகுமதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

அமைதி, வளம், வளர்ச்சி-மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் சீரிய ஆளுமையின்கீழ், தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. மனித வாழ்வியலில் வளமான வாழ்வு என்பது நாட்டின் வளர்ச்சினை மையப்படுத்தியே அமைந்துள்ளது. வளர்ச்சி என்பது வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியாக, மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இன்றியமையாத ஒன்றாகவே உள்ளது. மக்கள்தொகைப் பெருக்கத்தினைச் சார்ந்து, அவர்களின் பிற தேவைகளும் பெருகிக் கொண்டே செல்கின்றன. குறிப்பாக, ஆண்டுதோறும் பெருகிவரும் வாகனப் போக்குவரத்து என்பது இன்றியமையாத ஒன்றாகவே இருக்கின்றது. கிராமங்கள், நகரங்கள் என மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முக்கியமான சேவையாக போக்குவரத்துச் சேவை அமைந்துள்ளது. தமிழக மக்களின் வளர்ச்சி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு போக்குவரத்து வசதியினை ஏற்படுத்திக் கொடுத்தவர், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் என்று சொன்னால், அது மிகையாகாது. (மேசையைத் தட்டும் ஒலி)

2012-2013 ஆம் ஆண்டினை காட்டிலும், 2013-2014 ஆம் ஆண்டில் வாகனங்களின் எண்ணிக்கை 17 இலட்சம் அளவிற்கு உயர்ந்திருக்கின்றன. அதேநேரத்தில் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும்வகையில், இயக்கூர்திகள் சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்பட்டதன் விளைவாகவும், பொதுமக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியதன் மூலமாகவும், 2012 ஆம் ஆண்டை காட்டிலும் 2013 ஆம் ஆண்டு 1,519 சாலை விபத்துகளும், 568 உயிரிழப்பு ஏற்படுத்தும் விபத்துகளின் எண்ணிக்கை 612 ஆகவும் குறைந்திருக்கின்றன. நடப்பாண்டில் நடத்தப்பட்ட சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அனைத்தும், அனைத்துத் தரப்பு மக்களிடையே, அவர்களின் உயிர், உடமை மற்றும் பாதுகாப்புப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்விதத்தில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டு, 7 நாட்களில் 7 சிறப்பான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பொதுமக்களின் கவனத்தினை ஈர்க்கும்வகையில், அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு தொடர்புடைய புகைப்பட கண்காட்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள், சாலைப் பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏந்திச் செல்லும் நடை பேரணிகள் நடைபெற்றன. ஓட்டுநர்களுக்கு இலவச மருத்துவச் சிகிச்சை முகாம்கள், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சிறு கையேடு மற்றும் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடையே வழங்கியும், பள்ளி மாணவர்களுக்கு இடையேயான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகம், கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி என அனைத்துப் போட்டிகள் நடத்தப்பட்டு, சாலைப் பாதுகாப்பை கடைப்பிடிப்பேன் என்ற உறுதிமொழி எடுக்கின்ற நிலையை மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் ஏற்படுத்தி, சாலைப் பாதுகாப்பிற்காக தனி கவனம் செலுத்தினார்கள்.

குறைந்தபட்சம் 10 அல்லது அதற்குள் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய பகுதிகளை ஆய்வு செய்வதற்கு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. மனித உயிர் விலைமதிப்பற்றது என்பதற்கு முன்னோடியாக, இந்தியாவிலேயே, முதன்முதலாக தமிழகத்தில் 2002 ஆம் ஆண்டில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 50 கிலோ மீட்டர் இடைவெளியில், 'அவசர விபத்து நிவாரண சிகிச்சை மையங்கள்' மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் திருக்கரங்களால் துவக்கி வைக்கப்பட்டன என்பதை நிஷீறீபீமீஸீ லீஷீuக்ஷீ -என்று சொல்லக்கூடிய இந்த பொன்னான நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இதுவரை 1,39,365 உயிர்கள் புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய சீரிய திட்டங்களால் காப்பாற்றப்பட்டிருக்கின்றன.

பொதுமக்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பழகுநர் உரிமம் பெறுதல், ஓட்டுநர் உரிமம் பெறுதல், வாகனங்களைப் பதிவு செய்தல், வரி செலுத்துதல், அனுமதிச் சீட்டு பெறுதல் சம்பந்தமான பணிகளை மேற்கொள்ள தங்கள் இருப்பிடத்திலிருந்து நீண்ட தொலைவு பயணிக்க வேண்டிய நிலையினைத் தவிர்த்து, பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலேயே தங்கள் பணியினை முடித்துக்கொள்ளும் வகையில், இந்த 3 ஆண்டுகளில் 18 புதிய பகுதி அலுவலகங்கள், 16 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், 1 துணைப் போக்குவரத்து ஆணையர் அலுவலகம், 4 இணை போக்குவரத்து ஆணையர் அலுவலகங்களை மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் வழங்கியிருக்கின்றார்கள். இந்த அனைத்து அலுவலகங்களும் பொதுமக்களுடைய பயன்பாட்டிற்கு உதவும்வகையில், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய திருக்கரங்களால் தொடங்கி வைக்கப்பட்டு, மக்களுடைய சேவையில் உள்ளன. (மேசையைத் தட்டும் ஒலி)

ஒரு மாநிலத்திலிருந்து வேறொரு மாநிலத்திற்குச் செல்லும் வாகனங்களை பல்வேறு துறைகள்மூலம் வெவ்வேறு இடங்களில் நிறுத்தி சோதனை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைப்பதன்மூலம் சோதனை சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளையும் நவீன தொழில்நுட்பத்தில் ஒரே இடத்தில் மேற்கொள்வதால், பணிகளை மிக விரைவாக மேற்கொள்ளவும், வாகனங்களின் நீண்ட தூர நெரிசலைத் தவிர்க்கவும் முடிகிறது. இதற்காக முதன்முதலாக ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்குள் வரும் தேசிய நெடுஞ்சாலைகளில், ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைக்க மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். ஒரு மாநிலத்திலிருந்து வேறொரு மாநிலத்திற்குச் செல்லும் வாகனங்கள் பல்வேறு துறைகள்மூலம் வெவ்வேறு இடங்களில் நிறுத்தி சோதனை செய்ய, தேசிய நெடுஞ்சாலைகளில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைக்க முந்தைய மைனாரிட்டி தி.மு.க அரசு 10-7-2008 இல் கொள்கை விளக்கக் குறிப்பில் அறிக்கையினை வெளியிட்டிருக்கிறது.

10-07-2008 அன்று வெளியிடப்பட்ட அறிக்கை, 2008, 2009, 2010, 2011 வரை, கடந்த தி.மு.க. ஆட்சி முடியும் வரை, இந்தத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை; இந்தத் திட்டத்திற்கு ஒப்பந்தம் போடவில்லை; இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், இத்தகைய சிறப்பான திட்டத்தின்மூலம், அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து, ஒரே இடத்தில் இதுபோன்று வாகன சோதனை செய்வதன்மூலமாக, அரசுக்கும் வருவாய் வரும்; தவறு செய்யும் வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்தி, அவற்றின்மீது நடவடிக்கை எடுக்கவும்முடியும் என்பதை உணர்ந்து, இந்தத் திட்டத்திற்காக 19-4-2013 அன்று, 109 கோடியே 46 இலட்சம் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்து, அவை தொடர்பான பணிகள் தற்போது மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. (மேசையைத் தட்டும் ஒலி) இப்பணிகள் ஏப்ரல் 2015-க்குள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகப் பணிகளை விரைந்து முடிக்க, மின் ஆளுமை நடவடிக்கை அனைத்து அலுவலகங்களிலும் தமிழ்நாடு மாநில பெரும்பரப்பு வலை அமைப்புகள்மூலம், இணைப்புகளை ஏற்படுத்துதல் தொடர்பான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மேலும், நேரடியாக வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களுக்குச் செல்லாமல், வீட்டிலிருந்தபடியே போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கு வரி மற்றும் கட்டணம் செலுத்தும் முறை, 19-6-2012 அன்று மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய திருக்கரங்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இதேமாதிரியான வசதிகள் போக்குவரத்து வாகனங்களுக்கும், 25-10-2013 முதல் விரிவுபடுத்தப்பட்டன. இந்தச் சேவைகள்மூலம், 2013-2014 ஆம் ஆண்டில் 1,397.30 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளன.

கடந்த ஐந்தாண்டுகளில் வாடகைக் கட்டடங்களில் இயங்கிக் கொண்டிருந்த 5 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், 6 பகுதி அலுவலகங்கள் மற்றும் ஒரு சோதனைச் சாவடிக்கு, மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள், 16 கோடியே 46 இலட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து, அந்தக் கட்டடப் பணிகளுக்காக நிதியை வழங்கியிருக்கின்றார்கள்.

அதேபோல, போக்குவரத்துத் துறை வரலாற்றில், முதன்முதலாக பகுதி அலுவலகங்களுக்கு 2 கோடியே 76 இலட்சம் ரூபாய் செலவில், 52 புதிய ஜீப்புகளை மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வழங்கியிருக்கின்றார்கள். இந்தத் துறையிலுள்ள மோட்டார் வாகன ஆய்வாளர்கள், ஒரு விபத்து ஏற்பட்டால், அந்த இடத்திற்கு ஆய்வுக்குச் செல்ல வேண்டுமென்றால் அல்லது மற்ற வாகனங்களை ஆய்வு செய்யச் செல்ல வேண்டுமென்றால், அவருக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்தில் அவர் செல்லவேண்டும். இதுவரையில், தமிழகத்தில் போக்குவரத்துத் துறை வரலாற்றில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு அரசின் சார்பில் ஜீப்புகள் வழங்கப்பட்டன. அவர்கள் அந்த வாகனங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு, பகுதி அலுவலகங்களுக்கு ஜீப்புகள் இல்லை. அந்த நிலையை மாற்றவேண்டும்; அனைத்து ஆய்வாளர்களும் மிகச் சிறப்பான முறையில் பணியைச் செய்ய வேண்டுமென்பதற்காக, வாகனங்களைச் சோதனை செய்ய வேண்டுமென்பதற்காக, மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் முதன்முறையாக போக்குவரத்துத் துறையில் உள்ள பகுதி அலுவலகங்களுக்கு, மோட்டார் ஆய்வாளர்களுக்கு ஜீப்புகளை வழங்கியிருக்கின்றார்கள்.

அதேபோன்று, பள்ளிகளுக்குச் செல்லும் சிறார்களின் பாதுகாப்பினைக் கருத்தில்கொண்டு, சிறப்பு ஆய்வுக் குழுமம் ஒன்றின்கீழ், 19,261 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, 1,681 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு, சாலையில் ஓட்டுவதிலிருந்து அவை தகுதி நீக்கம் செய்யப்பட்டன.

கடந்த மூன்று ஆண்டுகளில் அதிக கட்டணம் வசூலித்த 38 ஆம்னி பேருந்துகள்மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் அதிகக் கட்டணம் செலுத்தி அல்லல்பட்ட பொது மக்களுக்கு, ஆம்னி பேருந்துகளுக்கு இணையான போக்குவரத்து வசதிகளை அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் வாயிலாக மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் உருவாக்கித் தந்திருக்கின்றார்கள். நீண்ட நாட்களாக பொது மக்களின் தீராத குறையாக இருந்த ஆட்டோ கட்டணம், சிறப்புக் குழுவினரால் சீரமைக்கப்பட்டு, மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய சீரிய நடவடிக்கையால் சென்னை மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சாலையில் ஏற்படுகின்ற விபத்துகளைக் கண்டறிந்து, அந்த இடங்களை ஆய்வு செய்து, அதற்குத் தேவையான பணிகளைச் செய்வதற்கு சாலைப் பாதுகாப்பு நிதி, மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய சீரிய ஆட்சியில் வழங்கப்படுகிறது. டெல்லியில் நடைபெற்ற அனைத்து மாநிலப் போக்குவரத்து அமைச்சர்கள், துறையினுடைய அதிகாரிகள் கூட்டத்தில் மற்ற மாநிலங்கள் இதைப் பார்த்து, எங்களுக்கும் நிதி வேண்டுமென்று கேட்டபோது, அப்போது மத்திய அமைச்சர் தமிழகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் செயல்படுத்தும் சாலைப் பாதுகாப்புத் திட்டத்தைப் பார்த்து, மற்ற மாநிலங்களெல்லாம் பின்பற்ற வேண்டுமென்ற அந்தக் கூட்டத்திலே வலியுறுத்திப் பேசினார்கள். (மேசையைத் தட்டும் ஒலி) சாலைப் பாதுகாப்பு நிதியின்மூலம், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, விலை மதிப்பற்ற மனித உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட சாலைப் பாதுகாப்புத் திட்டத்திற்கு நிதியாக 2006-2011 வரை கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில், ஆறு ஆண்டுகளில் ஒதுக்கிய தொகை 73.80 கோடி ரூபாய் மட்டுமே. மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், 2011 முதல் 2014 வரை, 235 கோடி ரூபாய் நிதியினை சாலைப் பாதுகாப்பு நிதியாக, தாயுள்ளத்தோடு வழங்கியிருக்கின்றார்கள். (மேசையைத் தட்டும் ஒலி)

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஐயப்பன் அமரும்போது, புலிக்கும்கூட புது மரியாதை பிறக்கிறது; எலி மீது பிள்ளையார் ஏறும்போது, அதற்கும்கூட ஏகமரியாதை கிட்டிவிடுகிறது.

 

பைரவர் குந்தும்போது நாய்க்கும்கூட நாட்டில் மரியாதை பிறந்துவிடுகிறது. உலகளந்த பெருமாள் உட்காரும்போது கழுகுகளுக்கும்கூட கௌரவம் வந்துவிடுகிறது. இப்படி, தெய்வம் உட்காரும்பொழுது பூவோடு சேர்ந்த நார்போல, விலங்குகளுக்குக்கூட வெகுமதிகள் கிடைக்கிறது. ஆனால், இந்த மரியாதைகளை தங்களுக்குக் கிடைத்திட்ட தனி மரியாதை என்று எண்ணிய தண்ணி வண்டிகளுக்கு இப்பொழுது நிதர்சனம் புரிந்திருக்கும். (மேசையைத் தட்டும் ஒலி) (குறுக்கீடுகள்)

எங்கள் வெற்றித் திருமகளாம் அம்மா, சுட்டிக் காட்டினால் மட்டும்தான் எதுவும் வெற்றிச் சின்னம். எங்கள் வெற்றித் திருமகளாம் அம்மா சுட்டிக் காட்டினால் மட்டும்தான் எதுவும் வெற்றிச் சின்னம். (குறுக்கீடுகள்) இல்லையேல், அது வெற்றுச் சின்னம். அம்மா கனிவோடு ஏறெடுத்துப் பார்த்தால், முளைக்க முடியாத கட்சியும் முன்னுக்கு வரும்; எழுந்திருக்க முடியாத கட்சியும் எதிர்க்கட்சியாகும். (குறுக்கீடுகள்)

(தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் (திரு. க. பாண்டியராஜன், திரு. சி. மைக்கேல் ராயப்பன் மற்றும் திருமதி ஆர். சாந்தி தவிர) மாண்புமிகு பேரவைத் தலைவரின் இருக்கைக்கு அருகில் வந்து கூச்சலிட்டனர்.)

மாண்புமிகு பேரவைத் தலைவர்: இதுபோன்று இங்கு வந்து கை நீட்டிப் பேசக் கூடாது. (குறுக்கீடுகள்) இப்படி கை நீட்டிப் பேசக் கூடாது. (குறுக்கீடுகள்) இது முறையல்ல. (குறுக்கீடுகள்)

மாண்புமிகு திரு. வி. செந்தில்பாலாஜி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் யாருடைய பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. (குறுக்கீடுகள்) நான் யாருடைய பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. (குறுக்கீடுகள்) நான் யாருடைய பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அவர்களுக்கு ஏன் கோபம் வருகிறது? (குறுக்கீடுகள்) நான் ஒரு கருத்தை வலியுறுத்திச் சொன்னால், எங்கப்பன் குதிருக்குள் இல்லையென்பதைப்போல் அவர்களாகவே உணர்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள்.

(தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் (திரு. க. பாண்டியராஜன், திரு. சி. மைக்கேல் ராயப்பன் மற்றும் திருமதி ஆர். சாந்தி தவிர) அவையிலிருந்து வெளியேறினர்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் யாருடைய பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. பொதுவாகத்தான் கருத்துகளை இங்கே சொல்லிக்கொண்டிருக்கின்றேன்.

எங்கள் வெற்றித் திருமகளாம் அம்மா, சுட்டிக் காட்டினால் மட்டும்தான் எதுவும் வெற்றிச் சின்னம். இல்லையேல் அது வெற்றுச் சின்னம். அம்மா கனிவோடு ஏறெடுத்துப் பார்த்தால் முளைக்க முடியாத கட்சியும் முன்னுக்கு வரும்; எழுந்திருக்க முடியாத கட்சியும் எதிர்க்கட்சியாகும். (மேசையைத் தட்டும் ஒலி) பாசத்தோடு பார்த்தால் பல்லக்கு ஏறும்; பகை கொண்டு பார்த்தால், பாடைதான் ஏறும். இப்பொழுது இந்த விவரம் விளங்க வேண்டியவர்களுக்கு விளக்கமாக விளங்கியிருக்கும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒரே ஒரு சிறு கதையை மட்டும் சொல்ல விரும்புகிறேன். இரண்டு பேர் இரயில்வே பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருக்கிறார்கள். அந்த இரண்டு பேர் நிற்கின்றபொழுது. ஒரு இரயில் வருகிறது. அந்த இரயிலிலே ஒருவர் ஏற முயற்சிக்கின்றார். அப்படி ஏற முயற்சிக்கின்றபொழுது. இன்னொருவர் அவரது முதுகைத் தட்டி, இந்த இரயிலில் கட்டணம் அதிகமாக இருக்கும். அடுத்த இரயில் வருகின்றபொழுது. ஏறிக் கொள்ளலாம் என்று சொல்கின்றார். அதற்கு அவர் சொல்கிறார், நாங்களெல்லாம் வெத்து வேட்டு, அதனால்தான் நான் இந்த இரயிலிலே ஏறுகிறேன் என்று சொல்லி இப்பொழுது 'வாக்-அவுட்' செய்துவிட்டார்கள்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாநிலம் முழுவதும் வேட்டையிட்டு, மற்றவர் நிலத்தை ஆட்டையிட்டு, மக்கள் பணத்தைத் தேட்டையிட்டு, பெற்ற மகளை சிறையிலிட்டு, பேதை மனைவியை கூண்டிலிட்டு, அண்ணன் தம்பியை மோதவிட்டு, தொண்டர்களைக் காயவிட்டு, குண்டர்களை மேயவிட்டு, கண்ணான தன்மானத்தை காற்றிலே பறக்கவிட்டு, கொள்கையிலே ஓட்டையிட்டு, கோட்டையை கோட்டைவிட்ட கருணாநிதி; (மேசையைத் தட்டும் ஒலி) இனி டெல்லி பக்கம் தலைவைத்துப் படுக்கக்கூடாது என்று வாக்குச்சீட்டுமீது ஆணையிட்டு, வழியனுப்பி வைத்தார்கள் தமிழ்நாட்டு மக்கள். 39-க்கு 39 தோல்வியைப் பெற்ற பின்பும், மக்கள் தீர்ப்பை மதிக்காமல் வெற்று அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். 'கடலில் தள்ளினால் கட்டையாவேன், மணலில் தள்ளினால் மட்டையாவேன்' என்று என்ன சொல்லியும் கருணாநிதி இனி மக்களை ஏமாற்ற முடியாது. என்ன செய்தும் கருணாநிதி இனி மக்கள் ஆதரவைப் பெற்றிட முடியாது. மாண்புமிகு அம்மா அவர்களை இனி ஒருக்காலும் வென்றிட முடியாது. (மேசையைத் தட்டும் ஒலி)

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒரு தலைவர் ஒரு முறை டெல்லி செல்கிறார். எதற்கு? பேரனுக்குப் பதவி வாங்க. மறு முறை டெல்லி செல்கிறார். எதற்கு? பிள்ளையின் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு. இன்னொரு முறை டெல்லி செல்கிறார். எதற்கென்றால், பிள்ளைக்கு பெயில் வாங்க. இன்னொருவர் டெல்லி செல்கிறார். எதற்கென்றால் மச்சானுக்குப் பதவி வாங்க. ஆனால், எங்கள் அம்மா டெல்லி செல்கிறார்-காவேரி உரிமையை மீட்க, (மேசையைத் தட்டும் ஒலி) முல்லைப் பெரியாறு முட்டுக்கட்டையைத் தகர்க்க, தமிழகத்திற்கான கூடுதல் ஒதுக்கீடு குறித்து கோரிக்கைகள் வைக்க, கருணாநிதியால் கைவிட்டுப் போன கச்சத் தீவை மீட்க. இப்படி, என் வாழ்வெல்லாம் மக்களுக்கே என்று தன் ஆயுளையே தந்து உழைக்கும், தமிழ் இனம் பெற்ற தவப் பயன் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மலர்ப் பாதங்களில் கோடானு கோடி நன்றி மலர்களைச் சமர்ப்பித்து, மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உத்தரவோடு புதிய அறிவிப்புகளை இங்கே சமர்ப்பிக்கின்றேன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்