முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைத் திருமணத்தில் இந்தியா ஆறாவது இடம்: ஐ.நா.

புதன்கிழமை, 23 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

நியூயார்க், ஜூலை.24 - உலகளவில் குழந்தைத் திருமணங்கள் அதிக எண்ணிக்கையில் நடக்கும் நாடுகளில், இந்தியா 6-வது இடத்தில் உள்ளதாக ஐ.நா. சபையில் சர்வதேச குழந்தைகள் அவசரகால உதவி நிதி அமைப்பு கூறியுள்ளது.

குழந்தைத் திருமணங்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சஹாரா பகுதியைச் சேர்ந்த ஆப்பிரிக்க நாடுகள், தெற்கு ஆசியத் துணைக் கண்டத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவது சாதாரண விஷயமாக உள்ளது. உல அளவில் ந"ைபெறும் குழந்தை திருமணங்களில் சரிபாதி அளவு தெற்காசிய நாடுகளில் தான் நடத்தப்படுகின்றன. இதில், 18 வயதை எட்டுவதற்குப முன்பே 70 கோடி சிறுமிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அதில் மூன்றில் ஒரு பங்கு 15 வயது கூட நிரம்பாதவர்கள்.

இந்தியாவில் திருமணம் முடித்த 20 முதல் 49 வயதுக்குள்பட்ட பெண்களில் 27 சதவீதம் பேருக்கு 15 வயதுக்குள்ளும், 31 சதவீதம் பேருக்கு 18 வயதுக்குள்ளும் மணமாகியுள்ளன. நைஜர், வங்கதேசம், சாட், மாலி, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு ஆகிய நாடுகளுக்கு அடுத்தப்படியாக இந்தியாவில்தான் உலகில் அதகளவு குழந்தைத் திருமணம் நடைபெறுகிறது. 10-வது இடத்தில் நேபாளம் உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்