முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4,797 பணியிடங்களை நீக்க உ.பி. அரசு முடிவு

புதன்கிழமை, 23 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, ஜூலை.24 - உத்தரப்பிரதேசத்தில் முக்கிய 10 துறைகளில் 4,797 பணியிடங்களை நீக்க செய்ய அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து லக்னொவில் செய்தியாளர்களிடம் மாநில தலைமைச் செயலர் அலோக் ரஞ்சன் கூறியதாவது: முதல்வர் அகிலேஸ் யாதவ் தலைமையில் நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில், தலைமைச் செயல் தலைமையிலான குழு தாக்கல் செய்த அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. இதன் முடிவில் அரசின் 10 துறைகளில் அவசியமற்ற 4,797 பணியிடங்களை நீக்குவது என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

மொத்தமுள்ள 4,797 பணியிடங்கலில் பணியாற்றும் 3,749 ஊழியர்கள் காலியாக உள்ள பிற துறைகளுக்கு பணிமாற்றம் செய்யப்படுவர். இதற்கான பட்டியல் தயாரிக்கும் பணி திட்டத்துறை மேற்கொள்ளும் என்று அசோக் ரஞ்சன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்