முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் காங். அரசு தோல்வி

புதன்கிழமை, 23 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர், ஜூலை.24 - கர்நாடகத்தில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதில் காங்கிரஸ் அரசு தோல்வியடைந்துள்ளதாக அந்த மாநில முன்னாள் முதல்வரும், ஷிமோகா மக்களவைத் தொகுதி உறுப்பினருமான எடியுரப்பா குற்றஞ்சாடியுள்ளார்.

பெங்களூருவில் பாஜக சார்பில் தலித், பழங்குடியினரின் வழர்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதியை உரிய முறையில் பயன்படுத்த வலியுறுத்தியும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது. அதில் எடியூரப்பா கூறியதாவது:

கர்நாடகத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மகளிர் மீதான பாலியல் வன்கொடுமைகல் அதகரித்து வருகின்றன. இதைக் கட்டுப்படுத்த அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், மெத்தன்மாகச் செயல்படுகிறது. இதன்மூலம், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் மகளிருக்குப் பாதுகாப்பு இல்லை என்பது தெளிவாகிறது என்றார் எடியூரப்பா.

கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் பேசியதாவது: கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு ஏழைகளுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது. தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை உரிய முறையில் செலவு செய்வதில் அரசு தோல்வியடைந்துள்ளது. மக்களுக்கு எதிரான இந்த ஆட்சியை அகற்றும் வரை பாஜக போராடும் என்றார் அவர்.

போராட்டத்தில் மாநில பாஜக தலைவர் பரஹலாத் ஜோஷி, சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர் ஈஸ்வரப்பா, முன்னாள் அமைச்சக் கோவிந்தகார்ஜோள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவையை முற்றுகையிட பேரணியாகப் புறப்பட்ட பாஜ கவினரை போலீசார், தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர், அவர்கல் விடுவிக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்