முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்ஜு புகார்: மன்மோகன் சிங் பதிலளிக்க வலியுறுத்தல்

புதன்கிழமை, 23 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை.24 - முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு எழுப்பியுள்ள புகார்களுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கும் காங்கிரஸ் கட்சியும் பதிலளிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் தேசிய துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறும்போது, "அரசியல் காரணங் களுக்காக நீதித்துறை உட்பட பல்வேறு அரசியல் சட்ட அமைப் புகள் முறைகேடாகப் பயன்படுத் தப்பட்டன என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க காங்கிரஸ் கட்சியும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் முன்வரவேண்டும். காங்கிரஸ் கட்சியும் ஊழலும் ஒன்றுக்கொன்று இணைந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நீதிபதிகள் நியமனத்தில் செய்த முறைகேடு, காங்கிரஸ் எவ்வாறு அரசியல் சட்ட அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தியது என்பதற்கு உதாரணமாகும்’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்