முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ்: அனைத்து இடங்களும் நிரம்பின

வியாழக்கிழமை, 24 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை 25 - தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இரண்டாம் கட்ட கலந்தாய்வில் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் இருந்த 150 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்பட்டன.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி அரங்கில் எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ். இரண்டாம் கட்ட கலந்தாய்வு மூன்றாவது நாளாக கடந்த புதன்கிழமை நடைபெற்றது. சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் காலியாக இருந்த 150 எம்.பி.பி.எஸ். இடங்கள் சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவ கல்லூரியின் 44 பி.டி.எஸ். காலியிடங்கள், சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளின் 148 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் என மொத்தம் 300க்கும் மேற்பட்ட இடங்களில் மாணவர்கள் சேர அனுமதி கடிதம் வழங்கப்பட்டது. எனவே அரசு மருத்துவ கல்லூரிகள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் என அனைத்தும் நிரப்பப்பட்டு விட்டன.

சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் மீதமுள்ள 872 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களை மட்டும் நிரப்ப தொடர்ந்து இன்றும் கலந்தாய்வு நடைபெறுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ். இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்றுடன் நிறைவடைகிறது. இரண்டாம் கட்ட கலந்தாய்வில் அனுமதி கடிதம் பெறும் மாணவர்கள் அனைவரும் ஆகஸ்ட் 1ம் தேதியன்று உரிய கல்லூரிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்