முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு

வியாழக்கிழமை, 24 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

திருமலை, ஜூலை 25 - திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்களின் வசதிக்காக தினமும் 32 லட்சம் கேலன்கள் தண்ணீர் தேவைப்படுகிறது. 1963ம் ஆண்டு 2 கிலோ மீட்டர் பரப்பளவில் மழை நீர் சேகரிக்கும் வகையில் கோகர்பம் அணை கட்டப்பட்டது. இதில் 2 ஆயிரத்து 840 லட்சம் கேலன்கள் நீரை சேமிக்க முடியும். கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து விட்டதால் கடுமையான வறட்சி நிலவியது. இதனால் இந்த அணையின் நீர் மட்டம் தரைமட்டத்திற்கு சென்று விட்டது.

1983ல் 8.44 கிலோ மீட்டர் பரப்பளவில் 5 ஆயிரத்து 240 லட்சம் கேலன்கள் தண்ணீர் சேகரிக்கும் வகையில் கட்டப்பட்ட பாபவிநாசனம் அணையில் தற்போது 10 சதவீதம் தண்ணீர் மட்டுமே உள்ளது. அது மட்டுமல்லாது, ஆகாச கங்கை அணை, குமாரதாரா அணை ஆகியவற்றிலும் தண்ணீர் குறைந்த அளவே உள்ளது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோயில் பக்தர்களுக்கு அணைகளில் உள்ள தண்ணீர் 30 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். இன்னும் சில நாட்களில் மழை பெய்யாவிட்டால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

பக்தர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதை தவிர்க்க தேவஸ்தானம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்படி நெல்லூர் மாவட்டம் கண்டலேறு அணையில் இருந்து கைலாசகிரி ரிசர்வாயருக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து பைப் லைன் மூலம் திருப்பதிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அதே போல் ஆயிரம் லிட்டர் தண்ணீர் ரூ. 36க்கு திருப்பதி மாநகராட்சியிடம் இருந்து பெற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 22ம் தேதி முதல் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் திருமலைக்கு மாநகராட்சி சார்பில் வழங்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago