முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் காந்தி இன்று அமேதி செல்கிறார்

வியாழக்கிழமை, 24 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

அமேதி, ஜூலை.25 - பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாதவகையில் தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியின் அணுகுமுறையே காரணம் என்று அந்த கட்சியில் உள்ளவர்களே குற்றம் சாட்டுகிறார்கள்.

அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி 1.07 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ வேட்பாளர் ஸ்மிருதி இராணியை தோற்கடித்தார். இதற்கிடையே தான் வெற்றி பெற்ற அமேதி தொகுதிக்கு ராகுல் காந்தி இன்று செல்கிறார். அதை அம்மாவட்ட காங்கிரஸ் தலைவர் யோகேந்திர மிஸ்ரா தெரிவித்தார். இது வழக்கமான ஒருநாள் வருகை என்றும் அவர் கூறினார். தேர்தல் முடிவுக்கு பிறகு ராகுல் காந்தி அமேதி செல்வது இது 2-வது முறையாகும்.

ராகுல் காந்தியிடம் தோல்வி அடைந்த ஸ்மிருதி இராணிக்கு மத்திய மந்திரி பவி கொடுக்கப்பட்டுள்ளது. மனிதவள மேம்பாட்டு துறை மந்திரியான அவர் கடந்த 19-ஆம் தேதி அமேதி சென்றார். மத்திய அரசு இங்குள்ள மக்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று அப்போது அவர் உறுதி அளித்து இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்