முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த் பேட்மிண்டன்: கானாவை வென்றது இந்தியா

வியாழக்கிழமை, 24 ஜூலை 2014      விளையாட்டு
Image Unavailable

 

கிளாஸ்கோ, ஜூலை.25 - கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் பேட்மிண்டன் பிரிவில் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் கானாவை இந்தியா 5 போட்டிகளிலும் வீழ்த்தியது.
முதலில் பாருப்பள்ளி காஷ்யப், கானாவின் டேனியல் சாம் என்பவரை 21-6, 21-16 என்ற செட்களில் 27 நிமிடத்தில் அடித்து நொறுக்கினார்.
அடுத்ததான மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் வெண்கலம் என்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, கானா வீராங்கனை ஸ்டெல்லா அமாசா என்பவரை 21-7, 21-5 என்ற செட்களில் ஊதினார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அக்‌ஷய் தேவால்கர்-பிரணவ் சோப்ரா ஜோடி 21-7, 21-11 என்ற செட்கணக்கில் 22 நிமிடங்களில் கானா ஜோடியான இம்மானுயேல் டான்க்கர்-ஆப்ரஹாம் அயிட்டே இணையை வீழ்த்தினர்.
மகளிர் இரட்டையர் பிரிவில் ஜ்வாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா 17 நிமிடங்களில் ஈவ்லின் போட்வே-டயானா ஆர்ச்சர் ஜோடியை 21-4, 21-10 என்ற செட்களில் அடித்து நொறுக்கினர்.
கடைசியாக, கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் பி.சி.துளசி-கிடம்பி ஸ்ரீகாந்த் ஜோடி சாம்-அமாசா ஜோடியை 21-5, 21-9 என்ற செட்களில் வீழ்த்தினர். அடுத்த போட்டியில் உகாண்டாவைச் சந்திக்கிறது இந்தியா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்