முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடியை அழைக்க அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 24 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்டன், ஜூலை.25 - அமெரிக்க பாராளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அழைக்க வேண்டும் என்று அந்நாட்டு அவைத்தலைவரிடம் 83 எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து அமெரிக்க பாராளுமன்ற எம்.பி. பிராட் ஷெர்மன் கூறுகையில், ஜனநாயக மதிப்புகளை பகிந்து கொள்வதன் அடிப்படையில், இந்தியா மற்றும் அமெரிக்கா தனிப்பட்ட உறவுகளைக் கொண்டுள்ளன. நரேந்திர மோடியின் வருகை இந்த உறவுகளை மேலும் விரிவாக்க உதவும் என்றார். இது தொடர்பாக பாராளுமன்ற அவைத்தலைவர் ஜான் போனரிடம் அளித்துள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு செப்டம்பர் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுடனான இருதரப்பு உறவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில். பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்ற பிரதமர் மோடியை அழைக்க வேண்டும். இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த இதன் மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளது. வளர்ந்து வரும் பொருளாதார ஆற்றலை பெற்றுள்ள நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தை பெற்றுள்ளது என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்