முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆகஸ்ட் 25-ல் இந்தியா - பாகிஸ்தான் பேச்சு

வியாழக்கிழமை, 24 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை.25 - இந்தியா - பாகிஸ்தான் வெளி யுறவுத் துறை செயலாளர்கள் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி, இஸ்லாமாபாத்தில் சந்தித்து இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சு நடத்தவுள்ளனர்.

இது தொடர்பான அறிவிப்பை இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சகங்களும் வெளியிட்டுள்ளன. முன்ன தாக, இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங்கும், பாகிஸ்தான் வெளி யுறவு செயலாளர் அய்ஸாஸ் அகமது சவுத்ரியும் தொலைபேசி யில் தொடர்பு கொண்டு பேசினர்.

கடந்த மே மாதம் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து நவாஸ் மோடி சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்குவது பற்றி விவாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சகங்களும் பேச்சு நடத்தி வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி அதிகாரிகள் நிலையிலான கூட்டத்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளன.

இந்த கூட்டம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago