முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானாவில் பஸ்-ரயில் மோதல் விபத்தில் 20 பேர் பலி

வியாழக்கிழமை, 24 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

மேடக், ஜூலை.25 - தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதியதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியாகினர்.

மேடக் மாவட்டம் மசாய்பேட் கிராமத்தில் நேற்று காலை 9.10 மணியளவில் இத்துயரச் சம்பவம் நடந்துள்ளது. காகடியா டெக்னோ பள்ளிக்குச் சொந்தமான பேருந்து 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது, மசாய்பேட் கிராமம் அருகே ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த நான்டெட் - செகந்தராபாத் பயணிகள் ரயில் பேருந்து மீது மோதியது.

இதில் பேருந்து ஓட்டுநர், பேருந்தில் இருந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயமடைந்த மாணவர்கள், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து தெலங்கானா முதல்வ கே.சந்திரசேகர ராவ் அதிர்ச்சியும், ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.ஹரீஷ் ராவ் விரைந்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட முதல்வர் சந்திரசேகர ராவ், சிறப்பான முறையில் மருத்துவ உதவி அளிக்குமாறு உத்தரவிட்டார்.

ரயில் மோதி பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளான சம்பவத்திற்கு தெலங்கானா உள்துறை அமைச்சர் நைனி நரசிம்ம ரெட்டி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இத்துயரச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

தெலங்கானா விபத்து குறித்து மக்களவையில் பேசிய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா, "இந்தச் சம்பவம் மிகவும் துயரமானது, துரதிர்ஷ்டவசமானது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago