முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை: அமைச்சர்

வியாழக்கிழமை, 24 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஜூலை.25 - ’டெங்கு’காய்ச்சலுக்கு ’சங்கு’ஊதியது, அ.தி.மு.க. அரசு என்று சட்டசபையில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார். சட்டசபையில் நேற்றைய கேள்வி நேரம் முடிந்ததும், ’’கொசுத் தொல்லையை கட்டுப்படுத்தி அதனால் காய்ச்சல் பரவாமல் தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து’மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் க.பீம்ராவ் கவன ஈர்ப்பு ஒன்றை கொண்டு வந்து பேசினார். அதற்கு பதில் அளித்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சல் கண்காணிப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தனியார் மற்றும் அரசு மருத்துவமனை ஆய்வக பரிசோதனைகளில் கண்டறியப்பட்ட டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற கொசுவினால் பரவும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன. சேகரிக்கப்பட்ட தகவல்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படுகின்றன.

கொசுவினால் பரவும் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கும், அதை முழுமையாக ஒழிப்பதற்கும் அரசு தீவிரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தேவையான ரத்த அணுக்கள் பரிசோதனைக் கருவி மருந்துகள், ரத்தக்கூறுகள் மற்றும் ரத்தம் ஆகியவை போதிய அளவு இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

கொசுக்களால் பரவக்கூடிய நோய்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டைவிட இவ்வாண்டு வெகுவாகக் குறைந்துள்ளது. மேலும், 2013-ம் ஆண்டு ஏற்பட்ட நிலைமாறி, இவ்வாண்டு கொள்ளை நோய் நிகழ்வுகளே ஏற்படா வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கொசுக்களினால் பரவும் நோய்கள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, இதுகுறித்து பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை. அனைத்து வகையான காய்ச்சல்களையும், கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு செவ்வனே மேற்கொண்டு வருகிறது. ’டெங்கு’காய்ச்சலுக்கு ’சங்கு’ஊதிய அரசு அ.தி.மு.க. அரசு. இவ்வாறு அவர் கூறினார். கொசுக்களை ஒழிப்பது குறித்து சட்டசபையில் நேற்று கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் பதில் அளித்து கூறியதாவது:–

தமிழகத்தில் கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது. கொசுக்களின் 4 பருவங்களிலும் அதை அழிப்பதற்கான மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. அரசின் இந்த நடவடிக்கையால் மலேரியா, டெங்கு, சிக்கன் குனியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பெரு மளவில் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தினமும் 6 ஆயிரம் பேர் காய்ச்சலால் பாதித்து சிகிச்சை பெற்றனர். ஆனால் தற்போது ஜூன் மாதத்தில் தினமும் 2,500 பேர்தான் சிகிச்சை பெறுகிறார்கள். கொசுக்களால் பரவும் நோய்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட வெகுவாக குறைந்துள்ளது. கொசுக்களால் பரவும் நோய்கள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. கொசு ஒழிப்பும் தீவிரமாக நடக்கிறது. எனவே பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்.இவ்வாறு அமைச்சர். பேசினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago