முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

148.53 ஏக்கர் நிலப்பரப்பில் மேலும் 3 சிட்கோ தொழிற்பேட்டை

வியாழக்கிழமை, 24 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூலை 25: நடப்பாண்டில் ,திண்டுக்கல் மாவட்டம் ஆர். கோம்பையில் 51.26 ஏக்கரிலும்; காஞ்சிபுரம் மாவட்டம் தண்டரையில் 43 ஏக்கரிலும்; மற்றும் கரூர் மாவட்டம் புஞ்சை காளக் குறிச்சியில் 54.27 ஏக்கரிலும் மேலும் மூன்று தொழிற்பேட்டைகள் துவங்கப்படும்

என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்திருக்கிறார். .

படித்து வேலையில்லாத இளைஞர் களுக்கு 6 மாத பயிற்சி அளிக்கப் படும். பயிற்சியின்போது ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

சட்டசபையில் அவை விதி 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:

சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளவர்களை; குறிப்பாக படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை; சுய தொழில் முனைவோர்களாக ஆக்கும் வகையில் தமிழக அரசு உருவாக்கியுள்ள வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், 1 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டில் தொழில் நிறுவனங்களை அமைக்க முன் வருவோருக்கு, திட்ட மதிப்பீட்டில் 15 விழுக்காடு அல்லது அதிகபட்சம் 75,000 ரூபாய் என்ற அளவில் தற்போது அரசு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானியத்தை 25 விழுக்காடாக அதிகரித்து, அதிகபட்சம் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வழங்க எனது தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 25 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

2. சிட்கோ நிறுவனம், அரசால் நிறுவப்பட்ட 35 தொழிற்பேட்டைகளையும்; சிட்கோவால் நிறுவப்பட்ட 62 தொழிற்பேட்டைகளையும் பராமரித்து வருகிறது. நடப்பாண்டில் மேலும் மூன்று தொழிற்பேட்டைகள் திண்டுக்கல் மாவட்டம் ஆர். கோம்பையில் 51.26 ஏக்கரிலும்; காஞ்சிபுரம் மாவட்டம் தண்டரையில் 43 ஏக்கரிலும்; மற்றும் கரூர் மாவட்டம் புஞ்சை காளக் குறிச்சியில் 54.27 ஏக்கரிலும் துவங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மூன்று தொழிற்பேட்டைகளுடன் சேர்த்து சிட்கோ நிறுவனத்தின் பராமரிப்பில் உள்ள தொழிற்பேட்டைகளின் எண்ணிக்கை 100 ஆக உயரும். மேற்கண்ட 3 இடங்களில் 148.53 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்படவுள்ள புதிய தொழிற் பேட்டைகளில் 23 கோடி ரூபாய் செலவில் தார் சாலைகள்; தெரு விளக்குகள்; குடிநீர் வசதி; பொது வசதி மையம் போன்றவை ஏற்படுத்தப்படும். இந்த தொழிற்பேட்டைகளில் வாகன உதிரி பாகங்கள்; பொது பொறியியல் அலகுகள்; பின்னலாடை தொழிற்சாலைகள் மற்றும் ஜவுளித் தொழிற்சாலைகள் என ஏறத்தாழ 345 தொழில் மனைகள் அமையப் பெற்று ஏறக்குறைய 10,000 பேர் வேலைவாய்ப்பினை பெறுவர். இந்தத் தொழிற்பேட்டைகளை அமைப்பதற்கான செலவினம் சிட்கோவின் நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலமாக அதாவது, சிட்கோவின் மூலமாக, விழுப்புரம் மாவட்டம் காட்டு வன்னஞ்சூர்; தருமபுரி மாவட்டம் பர்வதனஹள்ளி; அரியலூர் மாவட்டம் மல்லுhர்; மற்றும் நாமக்கல் மாவட்டம் வேட்டம்பாடி ஆகிய இடங்களில் தொழிற்பேட்டைகள் உருவாக்கிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த 4 தொழிற் பேட்டைகளில் 13 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை; மழைநீர் கால்வாய்; சிறு பாலம்; தெரு விளக்கு போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலமாக திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில்; காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம்; சேலம் மாவட்டம் கருப்பூர்; திருச்சி மாவட்டம் வாழவந்தான் கோட்டை; மற்றும் மதுரை மாவட்டம் கப்பலுhர் ஆகிய 5 இடங்களில் எனது ஆணைப்படி மகளிருக்கென தனியாக தொழிற் பூங்காக்கள் 358.44 ஏக்கர் பரப்பளவில் 1198 தொழில் மனைகளுடன் உருவாக்கப்பட்டு; 2001-ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றன. இத்தொழிலகங்களில் 9,100 தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். மேற்கண்ட தொழிற் பூங்காக்களில், மகளிர் தொழில் முனைவோர்கள் தங்களது தொழில் நடவடிக்கைகளை போட்டித் திறனுடன் மேற்கொள்ள, தொழில்நுட்பம்; தொழில் திறன்; விற்பனை உதவி ஆகியவைகளை மேம்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக, இந்த 5 மகளிர் தொழிற் பூங்காக்களில் உலகத் தரம் வாய்ந்த நேர்த்திமிகு மையம் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நேர்த்திமிகு மையத்தில் பொது காட்சியகம்; மற்றும் விற்பனை மையம்; பொது வியாபார மையம்; பொது கூட்ட அரங்கம்; பொது பயிற்சி கூடம்; நிர்வாக அலுவலகம்; வங்கி; குழந்தைகள் காப்பகம்;

மற்றும் மருத்துவ மையம் போன்றவை அமையப் பெறும். ஒவ்வொரு மையமும்

2 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் என மொத்தம் 12 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் இவை அமைக்கப்படும். எனது தலைமையிலான அரசு இத்தொகையை மானியமாக வழங்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

. சென்னை கிண்டியிலுள்ள அரசு தொழில்நுட்ப பயிற்சி மையம், தொழிற்சாலைகளுக்கு தொழில் அறிவு மிக்க மனித ஆற்றலை உருவாக்கித் தரும் நோக்கத்துடன் கருவி மற்றும் அச்சு, அதாவது கூடிடிட யனே னுநை; குளிர்சாதனம் மற்றும் குளிர்பதனியல் கலையில் மூன்றாண்டு பட்டயப் படிப்பினை புது தில்லியில் உள்ள அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் ஒப்புதலுடன் நடத்தி வருகிறது. தற்போதுள்ள கட்டடம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் ஒப்புதல் விதிகளுக்கு உரியதாக இல்லை. எனவே, 30,000 சதுர அடி பரப்பளவில் கூடுதல் கட்டடம் ஒன்று 9 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

டான்சி நிறுவனத்தின் கீழ், மர அறைகலன் உற்பத்திக்கென மட்டும்

9 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் பாரம்பரிய மர அறைகலன்களை மட்டும் தயாரிக்க முடிகிறது. தனியார் நிறுவனங்களுடன் போட்டி போடும் நோக்கத்துடனும்; தரமான பொருட்களை தயார் செய்து உரிய நேரத்தில் வழங்குவதற்காகவும்; ஒரு புதிய மர அறைகலன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை டான்சி நிறுவனத்தின் கீழ் நிறுவப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இப்புதிய மர அறைகலன் உற்பத்தித் தொழிற்சாலை நவீன உபகரணங்களுடன் 3 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவில் சென்னை அம்பத்தூரில் உள்ள தொழிற்பேட்டையில் அமைக்கப்படும்.

எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம், தொழில் வளம் மேலும் பெருகி; வேலைவாய்ப்புகள் அதிகரித்து; தமிழ்நாட்டின் பொருளாதாரம் உயர வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்