முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுமியை கற்பழித்து கொன்ற மந்திரவாதி அடித்து கொலை

வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, ஜூலை 26 - மேற்கு வங்காளத்தில் 7 வயது சிறுமியை கற்பழித்து கொன்று மரத்தில் தொங்க விட்டதாக மந்திரவாதியை பொதுமக்கள் அடித்து கொன்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் பதான் கிராமத்தில் 2 சிறுமிகள் கற்பழித்து கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டனர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதே போன்ற சம்பவம் மேற்கு வங்காள மாநிலம் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

இங்குள்ள நந்தகுமார் என்ற ஊரை சேர்ந்த 7 வயது சிறுமி அருகில் உள்ள ராஜ்நகர் பகுதியில் ஒரு மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மாணவியின் பிரேத பரிசோதனையில் அவள் கற்பழிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அந்த மாணவி பள்ளியில் இருந்து திரும்பும் வழியில் மர்ம நபரால் கடத்தி கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கிறாள். பள்ளி சென்ற மாணவி வீடு திரும்பாததால் பெற்றோர் பல இடங்களில் தேடினர். குளத்தில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று கருதி இரவு முழுவதும் அதில் தேடி பார்த்தனர்.

இந்த நிலையில் சாலையோரத்தில் மரத்தில் பிணமாக தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. மாணவி அணிந்திருந்த ஆடைகள் அருகில் கிழிந்து கிடந்தன. மாணவி பிணம் தொங்கிய இடத்திற்கு சற்று தொலைவில் ஊருக்கு வெளியில் ரத்னதாஸ் என்ற மந்திரவாதி வசித்து வருகிறார். அவருடன் 2 உதவியாளர்களும் உள்ளனர். மந்திரவாதி அந்த பகுதியில் ஏற்கனவே பல இளம்பெண்களுடன் செக்ஸ் லீலைகளில் ஈடுபட்ட போது பிடிபட்டுள்ளார். பலரிடம் தவறாக நடக்க முயன்றதாக குற்றச்சாட்டும் உள்ளது.

எனவே தற்போது சிறுமியையும் அவர் தான் கற்பழித்து கொலை செய்து இருக்கலாம் என்று கிராம மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மக்கள் விசாரணை ஏதுமின்றி மந்திரவாதி ரதன்தாசை அடித்து கொன்றனர். 2 உதவியாளர்களையும் கடுமையாக தாக்கினார்கள். காயத்துடன் தப்பிய இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் மேற்கு வங்காளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago