முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடிக்கு ஆதரவு கொடுத்தால் இந்தியா இந்து நாடாகுமாம்

வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

பனாஜி, ஜூலை 26 - மோடியை அனைவரும் ஆதரித்தால் இந்தியா இந்து நாடாக மாறும் என்று கோவா மந்திரி பேசினார்.

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடியை வாழ்த்தி கோவா சட்டப்பேரவையில் பாராட்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் மீது கோவா மாநில மந்திரி தீபக் தவ்லிகார் பேசும் போது, பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா ஒரு பெரிய இந்து நாடாக வளர்ச்சி பெறும் என்று நான் நம்புகிறேன். இந்த இலக்கை நோக்கி மோடி பணியாற்றி வருகிறார். நாமெல்லாம் ஒட்டுமொத்தமாக அவரை ஆதரித்தால் நிச்சயம் இது நிறைவேறும் என்றார்.

அவரது பேச்சுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது பற்றி கோவா மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் துர்கா தாஸ் காமத் கூறியதாவது, கோவா சட்டசபையில் மந்திரி இவ்வாறு பேசியிருப்பதன் மூலம் பா.ஜ.வின் குறிக்கோள் என்ன என்பது வெளிப்படையாகி விட்டது. மந்திரியின் கருத்தை முதல்மந்திரியும், பிரதமரும் ஆதரிக்கிறார்களா என்று கருத்து சொல்ல வேண்டும். ஒவ்வொரு பிரச்சினையிலும் டுவிட்டர் இணையதளம் மூலம் பதில் சொல்லும் மோடி கோவா மந்திரியின் பேச்சுக்கும் விளக்கம் அளிப்பாரா என்று கேட்க விரும்புகிறேன் என்று கூறினார்.

முன்னதாக கோவா கடற்கரையில் ஆபாச உடை அணிந்து சூரிய குளியல் போட தடை விதிக்க வேண்டும் என்று மாநில போக்குவரத்து மந்திரி சுதின் தலாலிகள் சட்டசபையில் பேசினார். இதே போல் இளம் பெண்கள் ஆபாச உடை அணிந்து நடன விடுதிகளுக்கு செல்வதையும் மந்திரி குறை கூறினார். இதெல்லாம் நம் கலாச்சாரத்துக்கு உகந்தது அல்ல. அவற்றை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றார். அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் தனது கருத்தை வாபஸ் பெற்றார்.

இப்போது மற்றொரு மந்திரியான தீபக் பேச்சுக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இரு மந்திரிகளும் சகோதரர்கள் ஆவார்கள். மராட்டிய கோமந்த கட்சி சார்பில் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். கோவாவில் ஆளும் பாஜனதா கூட்டணி இடம் பெற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்