முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகா.வில் காங்., தனித்துப் போட்டி: பிருத்விராஜ் சவான்

வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஜூலை 26 - மகராஷ்டிராவில் தேசியவாத காங்கிரசுடன் கருத்து ஒற்றுமை ஏற்படாவிட்டால் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயார் என்று காங்கிரஸ் முதல்வர் பிருதிவிராஜ் சவான் அறிவித்துள்ளார்.

மகராஷ்டிராவில் கடந்த 15 ஆண்டுகளாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் அக்டோபர் மாதம் இந்த மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பலத்த தோல்வி அடைந்தது. காங்கிரஸ் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 4 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரசின் செல்வாக்கு படுபாதாளத்திற்கு சென்றிருப்பதை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் பாதி இடங்களை ஒதுக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான அஜித்பவார் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் 174 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 114 இடங்களிலும் போட்டியிட்டன. தற்போது 144 இடங்கள் தர வேண்டும் என்று சரத்பவார் கட்சி நிபந்தனை விதித்து இருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே நாடாளுமன்றத்தில் பல விஷயங்களில் காங்கிரசுக்கு எதிரான நிலையை தேசியவாத காங்கிரஸ் எடுத்து வருகிறது. இதனால் மகராஷ்டிராவில் கூட்டணி நீடிக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இந்நிலையில் பாதி இடங்கள் ஒதுக்க வேண்டும் என நிபந்தனை விதித்து இருப்பது புதிய சிக்கலை உருவாக்கி உள்ளது.

கூட்டணி குறித்து நேற்று முன்தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கோரிக்கை குறித்து மாநில முதல்வர் பிருதிவிராஜ் சவான் கூறுகையில், கடந்த காலங்களிலும் தொகுதி பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த சோதனைகளை எல்லாம் இந்த கூட்டணி கடந்து வந்துள்ளது. கட்சியின் சுயமரியாதையை மனதில் வைத்து கூட்டணி பேச்சுவார்த்தை தொடரும். இந்த விவகாரத்தில் கருத்து ஒற்றுமை ஏற்படாவிட்டால் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிட தயாராக உள்ளது என்றார்.

முதல்வரின் கருத்து குறித்து தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில், காங்கிரசுக்கு என்ன தேவை என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சி தற்போது பலவீனமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் 174 இடங்களில் அந்த கட்சி போட்டியிட்டால் அது பாஜ கூட்டணிக்கு சாதகமாக அமைந்து விடும். இதை தான் அவர்கள் விரும்புகிறார்களா என்று கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டிருப்பதை போல் பாஜ கூட்டணியிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 15 தொகுதிகள் கூடுதலாக ஒதுக்க வேண்டும் என சிவசேனா கட்சிக்கு பாஜ நிபந்தனை விதித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago