முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த்: இந்தியாவுக்கு பளு தூக்குதலில் 2 தங்கம்

வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2014      விளையாட்டு
Image Unavailable

 

கிளாஸ்கோ, ஜூலை.26 - காமன்வெல்த் போட்டிகளில் பளு தூக்கும் பிரிவில் இந்தியா 2 தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. 20-வது காமன்வெல்த் போட்டி துவக்க விழா ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோ நகரில் நடந்து வருகிறது. துவக்க நாளின் போட்டிகளிvd பளு தூக்குதல் பிரிவில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். மகளிர் 48 கிலோ எடை தூக்குதல் பிரிவில் இந்திய வீராங்கனை சஞ்சிதா சானு தங்கம் வென்றார். 20 வயதேயான சஞ்சிதா சானு 173 கிலோ தூக்கி வெள்ளிப் பதக்கமும் வென்றனர். நைஜீரியாவின் நீசி ஓபரா 162 கிலோ மட்டுமே தூக்கி மூன்றாமிடத்தைப் பிடித்தார்.

ஆடவர் 56 கிலோ எடைப்பிரிவில் இந்தய பளு தூக்கும் வீரர் சுகென் தேமுதலிடத்தைப் பிடித்து தங்கம் வென்றார். இதே பிரிவில் இந்திய வீரர் மாலி மூன்றாமிடத்துடன் வெங்கலப் பதக்கம் வென்றார். சுகென் தே மொத்தம் 248 கிலோ தூக்கி தங்கத்தைக் கைப்பற்றினார். மாலி 244 கிலோ தூக்கி மூன்றாமிடத்தைப் பிடித்தார். மலேசிய வீராங்கனை பிசோல் 245 கிலோ எடை தூக்கி இந்தியப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

மல்யுத்தம் போட்டியில் இந்தியாவுக்கு சற்று ஏமாற்றம் ஏற்பட்டது. இந்திய வீரர்கல் சுஷீலா லிக்மாபாம், நவ்ஜோத் சானா ஆகியோர் தங்களது பிரிவு இறுதிப் போட்டிகளில் தோல்வி கண்டதால் வெள்ளிப்பதக்கத்தை மட்டுமே வெல்ல முடிந்தது. மகளிர் 52 கிலோ எடை பிரிவில் கல்பனா தோடம் வெங்கலப்பதக்கம் வென்றார். அவர் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் மொரீஷியசின் கிறிஸ்டியனா லெஜென்டிலை வென்றார்.

துவக்க சுற்றுகளை ஆவேசமாக செயல்பட்டு வெற்றிகளை குவித்த சுஷீலா, சானா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். மகளிர் 48 கிலோ எடை பிரிவில் இறுதிப்போட்டியில் சுஷீலா, ஸ்காட்லாந்து வீராங்கனை கிம்பர்லியிடம் தோல்வி கண்டதால் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

ஆண்கள் 60 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சானா, இங்கிலாந்து வீரர் ஆஷ்லே மெக்கனசியுடன் மோதினார். இந்தப் போட்டியில் சானா 3 பெனாலிடிகளைப் பெறவே மெக்கன்சி எளிதாக வெற்றி பெற்றார். இதன் மூலம் சானாவுக்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்தது.

காமன்வெல்த் மகளிர் ஹாக்கி போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இநத்ய அணி முதல் போட்டியில் கனடாவை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் ஜன்பிரீத்கவுர், பூனம் ராணி, ராணி ராம்பால் ஆகியோர் கோல் அடித்தனர். இந்திய வீரர்கள் கோல் மழை பொழிந்து கனடா வீராங்கனைகளை திணற அடித்தனர். இறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. வரும் 27-ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இந்திய மகளிர் அணி நியூசிலாந்தை எதிர்கொள்ள உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago