முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கைதிகளை ஜாமீனில் விடுவிக்க அரசு தரப்பு கருத்து அவசியம்

வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.26 - 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்கள், ஆயுள் கைதிகள், தூக்கு தண்டனை பெற்றவர்களை ஜாமீனில் விடுவிக்கும் முன்பு அரசு தரப்பு கருத்தை எழுத்துமூலம் பெறுவது அவசியம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கர் பகுதியைச் சேர்ந்த ஏழு பேருக்கு அங்குள்ள கூடுதல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆயுள் தண்டனை விதித்தார். அவர்கள் மேல் முறையீடு செய்தனர். இந் நிலையில், தண்டனைக் கைதிகள் நான்கு பேருக்கு ஜாமீன் வழங்கப் பட்டது. ஜாமீன் வழங்கும் முன்பு, அரசு தரப்பின் கருத்து கேட்கப் படவில்லை என்று கூறி உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.ஒய்.இக்பால், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்துள்ள தீர்ப்பு விபரம் வருமாறு:-

தண்டனை வழங்கப்பட்ட கைதி களை, குறிப்பாக 10 ஆண்டு களுக்கு மேல் தண்டனை பெற்றவர் கள், ஆயுள் தண்டனை மற்றும் தூக்கு தண்டனை பெற்றவர்களை ஜாமீனில் விடுவிக்கும்போது, அரசு தரப்பின் கருத்தை கேட்க வேண் டுமா என்ற கேள்வி எழுப்பப்பட் டுள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973, பிரிவு 389 (1)ன் கீழ், தண்டனை பெற்ற குற்றவாளிகள் மேல் முறையீடு செய்திருந்தால், அவர்களை நீதிமன்றம் ஜாமீனில் விடுவிக்கலாம் என்று கூறப்பட்டுள் ளது. ஆனால், சட்ட கமிஷன் பரிந்துரைப்படி அப்படி ஜாமீனில் விடுவிக்கும் முன்பு அரசு தரப்பு கருத்தை எழுத்துமூலம் தெரிவிக்க வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று வாதிடப்பட்டுள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்ட விதிகளின்படி, மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நீதிமன்றம் அரசு தரப்பு கருத்தை கேட்காமலே, குற்ற வாளிகளின் ஜாமீனை நிராகரிக் கலாம். ஆனால், ஜாமீனில் விடு தலை செய்ய முடிவெடுத்தால், அதற்கு அரசு தரப்பு எழுத்து மூலம் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப் பளிக்கப்பட வேண்டும்.

ஒரு குற்றவாளியை ஜாமீனில் விடுவிக்கும் முன்பு, அவரது குற்றத் தன்மை, வயது, நீதி வழங்குவதில் மக்களிடம் நம்பிக்கையை ஏற் படுத்துதல் போன்றவற்றை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த நடை முறை பின்பற்றப்படுகிறது. அது போன்ற தண்டனை குற்றவாளி களை ஜாமீனில் விடுவிக் கும்போது, அரசு தரப்பு எழுத்து மூலம் பதில் தெரிவிக்காவிட்டால், பதில் தெரிவிக்கவில்லை என்பதை பதிவு செய்துவிட்டு முடிவெடுக்க வேண்டும்.

ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஆசம்கர் பகுதியை சேர்ந்த நான்கு பேரும் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். இல்லாவிட்டால், அவர் களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். அவர்கள் புதிதாக ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம். அதில், தற்போது கூறப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago