முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிக நபர் ஆட்டோக்களின் உரிமங்களை ரத்து செய்ய உத்தரவு

வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஜூலை26 - அதிகமான நபர்களை ஏற்றிச் செல்லும் ஷேர் ஆட்டோக்களின் உரிமங்களை ரத்து செய்வது போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் இயங்கும் ஷேர் ஆட்டோக்களில் அதிகமான நபர்களை ஏற்றுவதையும், ஓட்டுநர் இருக்கையில் இருவர் பயணிப்பதையும் தடுக்கக்கோரி சமூக சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் விதிமீறல்களைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவை தமிழக அரசு பின்பற்றவில்லை அதனால், உயர்நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாத தமிழக அரசின் போக்குவரத் துறை அதிகாரிகள், சென்னை மாநகர போலீஸ் ஆணையர் ஆகியோருக்கு எதிராக ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு நடந்தது.

விசாரணையின் போது, போக்குவரத்துத் துறை ஆணையர் மற்றும் போலீஸ் ஆணையர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது அதில், அதிக நபர்களை ஏற்றிய குற்றத்துக்காகவும், முன் இருக்கையில் இருவர் அமர்ந்து சென்ற குற்றத்துக்காகவும் இதுவரை 11 ஆயிரத்து 860 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், ரூ. 91 லட்சத்து 35 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது தவிர, 40 ஆட்டோக்களுக்கான அனுமதிகள் தாற்காலிகமாகவும், 13 ஆட்டோக்களின் அனுமதிகள் நிரந்தரமாகவும் ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டது.

விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அதிக நபர்களை ஏற்றும் ஷேர் ஆட்டோக்கள் மீது அபராதம் விதிப்பது மட்டுமே போதுமானதாக நாங்கள் கருதவில்லை.

அவர்களின் உரிமங்களை தாற்காலிகமாக மற்றும் முழுவதுமாக ரத்து செய்வது போன்ற கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு இந்த அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கிறோம். இவ்வாறு நீதிபதிகளின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago