முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை அவினாசி சாலை விவகாரம்: அமைச்சர் பதில்

வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஜூலை26 - கோயம்புத்தூர் அவினாசி சாலை மேம்பாலத்தின் கீழ் மழை நீரை மின் மோட்டார்கள் மூலம் ஒரு மணி நேரத்திற்குள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால். மேம்பாலத்தின்கீழ் பகுதியில் போக்குவரத்து வாகனங்கள் தங்குதடையின்றி செல்கிறது என்றுஅமைச்சர் அமைச்சர் வேலு மணி தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி, அவினாசி சாலை மேம்பாலத்தின் கீழ் மழைக் காலத்தில் தேங்கும் தண்ணீரை வெளியேற்ற அரசு ஆவன செய்யுமா? என்று அ.தி.மு.க.எம்எல்ஏ

தா. மலரவன்""நேற்று சட்டசபையில் கேட்ட கேள்விக்கு அமைச்சர் வேலு மணி கூறியதாவது:

கோயம்புத்தூர் மாநகராட்சி, அவினாசி சாலை மேம்பாலத்தின் கீழ், மழைக் காலத்தில் தேங்கும் தண்ணீரை அகற்ற மேம்பாலப் பகுதியில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்புத் திட்டத்தின் கீழ் பிரதான மழைநீர் வடிகால் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதால், மழைக் காலங்களில் அதிகப்படியாக வரும் தண்ணீர் மழைநீர் வடிகால் வழியாக வெளியேறிவிடுகிறது. இதன் காரணமாக மழைக் காலங்களில் மேம்பாலப் பகுதியில் தண்ணீர் வரத்தின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. மேலும், மழைக் காலங்களில் வரும் தண்ணீர் மேம்பாலப் பகுதியில் உள்ள நீரேற்றும் அறையிலுள்ள மின் மோட்டார் மூலமும் வெளியேற்றப்பட்டு வருகிறது

உறுப்பினர் அந்த மாநகராட்சிக்கு மேயராக இருந்தவர். அந்தப் பாலம் தி.மு.க. ஆட்சிக் காலத்திலே கருணாநிதியால் கட்டப்பட்ட மேம்பாலம் ஆகும். அந்தப் பாலத்தில் தேங்கும் தண்ணீர் வெளியேறாமல் இருந்தது உண்மை. கோவை மாநகராட்சியில் அவினாசி சாலை மேம்பாலம் 1974 ஆம் ஆண்டிலே கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் அடியில் மழைக் காலங்களில் அங்கு தேங்கும் மழை நீரானது 7.5 குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டாரின் மூலம் அருகிலுள்ள மழைநீர் வடிகால் மூலம் வாளாங்குளத்திற்கு செல்லுமாறு அமைக்கப்பட்டது. இந்தப் பாலத்தின் கீழ்மட்டப் பகுதியிலிருந்து வாளாங்குளம் மட்டம் வரை 4 மீட்டர் கால்வாய் உள்ளது. இப்பாலத்தைச் சுற்றி சுமார் 2 சதுர கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலிருந்து மழைக் காலங்களில் சுமார் 29 இலட்சம் லிட்டர் மழை நீர் வந்து சேர்ந்து கொண்டிருந்தது. அந்த மழை நீரை 7.5 குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார் மூலம் ஒரு மணிக்கு 13,500 லிட்டர் வீதம் 29 இலட்சம் லிட்டர் நீரை வெளியேற்ற குறைந்த பட்சம் 9 முதல் 10 நாட்கள் தேவைப்பட்டது. ஆனால், தற்பொழுது இந்த மேம்பாலத்தில் 30 குதிரைத் திறன் கொண்ட இரண்டு மின் மோட்டார்கள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் மழை நீர் முழுவதுமாக வெளியேற்றப்படுகிறது. அது தவிர, மின் தடை ஏற்படும் சமயங்களில் கூடுதலாக 50 மற்றும் 12.5 குதிரைத் திறன் கொண்ட இரண்டு டீசல் இயந்திரங்களும் அமைக்கப்பட்டு மழை நீர் உடனுக்குடன் வெளியேற்றப்படுகிறது. மேலும், தற்பொழுது அந்த மேம்பாலத்தைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் மழைக் காலங்களில் அதிகப்படியாக வரும் மழை நீரை புதிதாகக் கட்டப்பட்டுள்ள மழை நீர் வடிகால் மூலம் வெளியேறுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் செல்லும் மழையின் அளவு 14 இலட்சம் லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது. இந்த மழை நீரை மின் மோட்டார்கள் மூலம் ஒரு மணி நேரத்திற்குள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால். மேம்பாலத்தின்கீழ் பகுதியில் போக்குவரத்து வாகனங்கள் தங்குதடையின்றி செல்கிறது

அப்படி ஏதாவது ஒரு சூழ்நிலை இருந்தால் கண்டிப்பாகஅம்மா அவர்களின் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தக் கேள்வி கோவை மாநகராட்சி மேம்பாலத்தில் தண்ணீர் தேங்கியது பற்றிய கேள்வியாகும். இந்தக் கேள்விக்கும், மூலக் கேள்விக்கு சம்பந்தம் இல்லை. உறுப்பினர் சொன்னதெல்லாம், கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில்தான் நடந்தது. சென்னை மாநகரத்தில் மழை பெய்தால், உடனடியாக மழை நீர் அப்புறப்படுத்தப்பட்டு விடுகிறது. இப்போது எந்த பிரச்சினையும் இல்லை. உறுப்பினர் சொன்னதைப்போல எந்த இடத்தில் மழை நீர் தேங்கி இருந்தாலும்கூட உடனடியாக மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மேலான கவனத்திற்கு கொண்டுசென்று சரி செய்யப்படும்

இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்