முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்நடை ம.கல்லூரியில் நானோ தொழில்நுட்ப மையம்

வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2014      அரசியல்
Image Unavailable

 

சென்னை.ஜூலை26 - முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் நானோ தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும்.என்று கால்நடைத்துறைஅமைச்சர்,டி,கே.எம்,சின்னையா அறிவித்துள்ளார்.

சட்டசபையில் நேற்று கால்நடைத்துறை மானியக்கோரிக்கையை அமைச்சர். டி,கே.எம்,சின்னையா தாக்கல் செய்தார்..அப்போது அவர் அறிவித்ததாவது :

 

கருவூட்டல் நிலையங்களில் அளிக்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், தரமான உறைவிந்து வழங்குவதை உறுதி செய்யவும், 700 கருவூட்டல் நிலையங்களுக்கு திரவ நைட்ரஜன் குடுவைகள் மற்றும் இதர உபகரணங்களும், 20 உறைவிந்து வங்கிகளுக்கு அதிக கொள்ளளவு கொண்ட திரவ நைட்ரஜன் குடுவைகள் மற்றும் உறைவிந்து குச்சிகளின் தரத்தை உறுதிசெய்யும் உபகரணங்கள் ஆகியன மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி 7 கோடியே 66 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

செயற்கைமுறை கருவூட்டல் வசதியை கால்நடை வளர்ப்போரின் வசிப்பிடங்களிலேயே அளிக்கும் வகையில் 500 கிராமப்புற இளைஞர்களுக்கு செயற்கைமுறை கருவூட்டல் பணி மேற்கொள்ள பயிற்சி மற்றும் செயற்கைமுறை கருவூட்டலுக்கான இடுபொருட்கள் வழங்கப்படும். இதன் மூலம் 500 புதிய செயற்கை முறை கருவூட்டல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு, இதுவரை இப்பணி மேற்கொள்ளப்படாத குக்கிராமங்களுக்கும் செயற்கைமுறை கருவூட்டல் வசதி ஏற்படுத்தப்படும். இதற்கென நடப்பாண்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தொலைதுhரக் கிராமங்களில் உள்ள விவசாயிகளால் பராமரிக்கப்படும் கால்நடைகளும், முதலுதவி மற்றும் இனப்பெருக்க சேவைகள் போன்ற அடிப்படை வசதிகளைப் பெறும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி புதிதாக 50 கால்நடை கிளைநிலையங்கள் 2 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் தோற்றுவிக்கப்படும்.

தமிழகத்தின் மாட்டினங்களில் ஒன்றான பர்கூர் மாட்டினத்தை அழிவிலிருந்து காத்திடும் பொருட்டு, வரும் ஐந்தாண்டுகளில் ஈரோடு மாவட்டம் பர்கூரில், ரூபாய் 6 கோடி நிதி ஒதுக்கீட்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி, தமிழ் நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மூலம் பர்கூர் மாட்டின ஆராய்ச்சி நிலையம் நிறுவப்படும். நடப்பாண்டில் இத்திட்டம் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

கால்நடைகளில் நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுப்பதற்காக, நோய்கண்டறிதல், நோய்த்தடுப்பு, நோய் கட்டுப்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் பொருட்டு, கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவுகள் இல்லாத இரண்டு மாவட்டங்களில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி 2 கோடி ரூபாய் செலவில், புதிய கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவுகள் துவக்கப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், ஆதரவற்ற பெண்கள், நலிவடைந்தோர் மற்றும் சிறு, குறு விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளை பாதுகாக்கும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி கறவை மாடுகளுக்கு 5,000 கொட்டகைகளும், ஆட்டினத்திற்கு 10,000 கொட்டகைகளும் மற்றும் கோழியினத்திற்கு 1,000 கொட்டகைகளும், ஊரக வளர்ச்சித்துறையின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு அரசு செலவில் அமைத்துத் தரப்படும்.

இனவிருத்திக்கு உகந்த கால்நடைகளின், இனப்பெருக்கத் திறனை உறுதிப்படுத்துவதுடன் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், மாட்டினங்களில் சினையுறாத் தன்மையைக் குறைப்பதற்காக, இரண்டு பின்தங்கிய மாவட்டங்களில் சினையுறா மாடுகள் சிறப்பு சிகிச்சை மையங்கள், 24 இலட்சம் ரூபாய் செலவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி அமைக்கப்படும்.

கால்நடை மருத்துவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தி, அதன்மூலம் கால்நடைகளுக்கு நவீன மருத்துவ சேவையை வழங்கிட, முழு ஊதியத்துடன் கால்நடை மருத்துவ பட்ட மேற்படிப்பு மற்றும் முனைவர் பட்டப்படிப்பு பயில 15 கால்நடை உதவி மருத்துவர்கள் / ஆராய்ச்சி உதவியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி அலுவலர்கள் ஆகியோருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி அனுமதி வழங்கப்படும்

கண்காணிப்பை அதிகரிப்பதன் வாயிலாக கால்நடை மருத்துவ சேவையை மேம்படுத்தவும், அரசின் திட்டங்கள் அனைத்தும் குக்கிராமங்களில் உள்ள மக்களையும் சென்றடைவதை உறுதிசெய்யும் விதமாகவும், வருவாய் கோட்டங்களின் எண்ணிக்கைக்கு இணையாக கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்கள் இருக்க வேண்டுமென்ற அடிப்படையில் ஸ்ரீரங்கம், அம்பத்துhர் மற்றும் இலுப்பூர் ஆகிய 3 கோட்டங்களில் உதவி இயக்குநர் அலுவலகங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் தோற்றுவிக்கப்படும்.

தீவன உற்பத்திக்கு தேவைப்படும் நீர், நிலம் மற்றும் மனித உழைப்பு ஆகியவற்றின் தேவைகளைக் குறைத்து, சத்தான பசுந்தீவனத்தை உற்பத்தி செய்ய புதிய தொழில் நுட்பமான நீர்கட்டு தீவன உற்பத்தியை தமிழகத்தில் அறிமுகப்படுத்தும் பொருட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி 29 இலட்சம் ரூபாய் செலவில், மாதிரி நீர்கட்டு (ழலனசடியீடிniஉள) தீவன உற்பத்தி மையம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் நிறுவப்படும்.

முறையான தடுப்பு மருந்து வழங்குவதன் மூலம் கால்நடைகளின் நலத்தைக் காத்திடவும் அசையூண் பிராணிகளின் உற்பத்தியை பெருக்க ஊட்டச்சத்துக்கள் உற்பத்தி செய்யவும், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நோய்களை கட்டுப்படுத்த தடுப்பூசி உருவாக்கவும் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் நானோ தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும்.

தமிழகத்தை தீவன உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்ற, மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் தீவன உற்பத்தி அலகுகள் அமைக்கும் திட்டம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மூலம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய இரு மாவட்டங்களில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்படுத்தப்படும்.

கால்நடை பராமரிப்புத் துறையின் திட்ட செயல்பாடுகளை மாநிலத் தலைமையிடத்திலிருந்து கண்காணிக்கவும், கள கால்நடை மருந்தகங்களில் இருந்து தகவல்களை குறைந்த நேரத்தில் பெற்று நிர்வாகத்தை மேம்படுத்தவும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், முன்னோடித் திட்டமாக அனைத்து கால்நடை மருந்தகங்களுக்கும் 16 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி அலைபேசிகள் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்