முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பால் கூ.சங்கங்களின் பணியாளர்களுக்கு தையற்கூலி உயர்வு

வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஜூலை26 - முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, பால் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களுக்கு சீருடை செலவு ; தையற்கூலி உயர்த்தி வழங்கப்படும் என்று பால்வளத்துறைஅமைச்சர், வி.மூர்த்தி அறிவித்துள்ளார்.

சட்டசபையில் நேற்று பால்வளத்துறை மானியக்கோரிக்கையை அமைச்சர், வி.மூர்த்தி தாக்கல் செய்தார்.அப்போது அவர் அறிவித்ததாவது :

முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படிவிருதுநகர், நீலகிரி மற்றும் திருச்சி ஒன்றியங்களில், பாலிலிருந்து கொழுப்பு பிரித்தெடுக்கும் இயந்திரம், பால்பாக்கெட் தயாரிக்கும் இயந்திரம், கொதிகலன், பால் குளிரூட்டும் இயந்திரம், மின்ஆக்கி, வெண்ணெய் தயாரிக்கும் இயந்திரம் மற்றும் டப்புகள் சுத்தம் செய்யும் இயந்திரங்கள் போன்றவை 1 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும். இதன் மூலம் சுமார் 61,000 பால் உற்பத்தியாளர்கள் மற்றும் 1,50,000 நுகர்வோர் குடும்பத்தினர்கள் பயன்பெறுவர்.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி 25 சரக துணைப் பதிவாளர் (பால்வளம்) அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. துணைப் பதிவாளர் (பால்வளம்) பெரம்பலுhர், அரியலுhர் மற்றும் திருநெல்வேலி ஆகிய 3 துணைப் பதிவாளர் (பால்வளம்) அலுவலகங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகின்றன. இதர 22 அலுவலகங்கள், மாவட்ட ஒன்றிய கட்டடங்கள் மற்றும் தனியார் கட்டடங்களில் இயங்கி வருவதால் அடிக்கடி இடமாற்றம் செய்ய வேண்டியதை தவிர்த்து நிரந்தர இடத்தில் இயங்குவதன் மூலம் பொது மக்களுக்கு சிறப்பான சேவையை அளிப்பதற்காக முதற்கட்டமாக நடப்பாண்டில் 5 சரக துணைப்பதிவாளர் (பால்வளம்) அலுவலகங்களுக்குமுதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி3.15 கோடி ரூபாய் செலவில் சொந்த கட்டடம் கட்டித் தரப்படும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி, தற்போதுள்ள விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களுக்கு வழங்கப்படும் சீருடை செலவு மற்றும் தையற்கூலி ஆகியவை ஆண்களுக்கு ரூ.890/-லிருந்து ரூ.1,200/- ஆகவும், பெண்களுக்கு ரூ.790/-லிருந்து ரூ.1,100/-ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த 20,000 பணியாளர்கள் பயனடைவார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி நுகர்வோர்களுக்கு தரமான பால் வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு தகுந்த இடவெளியில் இயந்திர தளவாடம் மற்றும் பால் வழித்தட குழாய்களை சுத்திகரிக்கும் வசதி, குளிர்சாதன வசதி, உயர்மின் அமைப்பு வசதிகள் ஏற்படுத்தும் பொருட்டு புதுக்கோட்டை ஒன்றியத்தில் ரூ.1.21 கோடி, சிவகங்கை ஒன்றியத்தில் ரூ.1.54 கோடி மற்றும் காஞ்சீபுரம்-திருவள்ளூர் ஒன்றியத்தில் ரூ.72 இலட்சம் ஆக மொத்தம் ரூ.3.47கோடி செலவில் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் சுமார் 42,000 பால் உற்பத்தியாளர்கள் மற்றும் 50,000 நுகர்வோர் குடும்பத்தினர் பயன் பெறுவார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி, தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் உறுப்பினர்களின் கறவை மாடுகள் முறையாக பராமரிக்க 5,000 உறுப்பினர்களுக்கு அரசு நிதி உதவியுடன் கால்நடை கொட்டகைகள் கட்டி வழங்கப்படும்.

மேலும், சுகாதாரமான முறையில் தரமான பால் கறவல் மற்றும் கொள்முதல் செய்யப்படுவதை உறுதி செய்யும் வகையில் 25 கறவை மாடுகள் வரை கட்டி பால் கறக்க போதுமான பொது பால் கறவல் கூடங்கள் 100 தொடக்கப் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு கட்டி வழங்கப்படும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி, தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் உறுப்பினர்கள் பயன் பெறும் வகையில் 20.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 125 பால¦ உற¦பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு 500 துருவுறா பால்கேன்களும் (அரசு மானியம் ரூ.10.00 இலட்சம் மற்றும் பயனாளி சங்கம் ரூ.10.00 இலட்சம்) மற்றும் கால்நடை மருத்துவ சிகிச்சைக்கு பயன்படும் கிட்டிகள் 1.50 கோடி ரூபாய் செலவில் 1,000 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படும்..

 

மாதவரம் பால்பண்ணையில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், அதில் உள்ள கனி தரும் மரங்களுக்கு தேவையான நீர் ஆதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி, பழத்தோட்ட பகுதியில் 5.00 இலட்சம் ரூபாய் செலவில் மழைநீர் சேகரிக்கும் குட்டைகள் அமைக்கப் படும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி, சுற்றுச்சூழல் தூய்மையை கருத்தில் கொண்டு பசுமை பண்ணை முனைப்பின் கீழ் 100 இலட்சம் ரூபாய் செலவில் இரண்டு சூரிய ஒளி செரிவூட்டிகள் நிறுவப்படும். மேலும், 50 மொத்த பால் குளிர்விப்பான் நிலையங்களுக்கு தேவையான சுடுநீர் தயாரிக்க ஒவ்வொன்றும் 500 லிட்டர் கொள்ளவு கொண்ட சூரிய ஒளி கொதிகலன்கள் 57.50 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப் படும்.

.இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago