முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்.– திமுக-வால் தான் நோக்கியா தொழிலாளர்கள் வேலை இழப்பு

வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை. 26 - ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா தொழிற் சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் சிலர் பணி இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டது குறித்து சட்டசபையில் உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதன் மீது சவுந்தரராஜன் (மார்க்சிஸ்டு கம்யூ.) பேசும் போது நோக்கியோ கம்பெனியில் 5600 பேர் தன் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர்.

‘‘இவர்களுக்கு வயது 25 தான் இருக்கும். 50 வயதுக்கு மேல்தான் விருப்ப ஓய்வு என்பது இருக்கும். ஆனால் இங்கு அப்படி அல்ல. எனவே இந்த வி.ஆர்.எஸ் திட்டத்தை அரசு தடுத்து இருக்க வேண்டும். வேலை இழந்தவர்களுக்கு மாற்று வேலை கிடைக்க அரசு முயற்சிக்க வேண்டும்’’ என்றார்.

இதற்கு தொழில்துறை அமைச்சர் தங்கமணி கூறியதாவது:–

நோக்கியா தொழிற்சாலை அம்மா ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. 7 ஆண்டுகளாக சரியாக போய் கொண்டு இருந்தது. 6 லட்சம் செல்போன் தயாரித்தனர். 2012–ம் ஆண்டு மத்திய அரசு ஒரு சட்டத்தை கொண்டு வந்து வரி விதித்தனர். இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கும் நடந்தது.

கடந்த தி.மு.க. – காங்கிரஸ் அரசின் முடிவால்தான் நோக்கியா தொழிற்சாலை முடங்கியது 5600 பேர் விருப்ப ஓய்வு பெற்று ரூ. 4 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை வாங்கி சென்று உள்ளனர். நோக்கியா நிறுவனம் மீது வருமான வரித்துறை ஏற்கனவே எடுத்த நடவடிக்கையை தொடர்ந்து இந்த நிறுவனத்தின் வங்கி கணக்கு மற்றும் அசையா சொத்துக்களை வருமான வரி சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டது.

5600 பணியாளர்கள் விருப்ப ஓய்வு பெற சம்மதித்தனர். அவர்களுக்கு இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு 900 பணியாளர்கள் உள்ளனர். நோக்கியா நிறுவனம் தனது விரிவாக்க திட்டத்துக்காக ஏற்படுத்திக் கொண்ட புத்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாது என்பதால் அதை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்