முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எந்திரத்தில் வேட்பாளர் படம்: தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்

சனிக்கிழமை, 26 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை 27 - வாக்கு எந்திரத்தில் வேட்பாளரின் புகைப்படம் ஒட்டப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

வாக்கு பதிவு எந்திரத்தில் அந்தந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் மற்றும் அவர் சார்ந்த கட்சியின் சின்னம் அகர வரிசையில் ஒட்டப்படும். பிரபல கட்சிகளின் வேட்பாளர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் அவரது பெயர் கொண்டவர்களை எதிர்கட்சிகள் தேர்தலில் நிறுத்தி வருகின்றன. ஒரே பெயர் கொண்ட பல வேட்பாளர்கள் வாக்கு எந்திரத்தில் இடம் பெறும் சூழ்நிலையில் வாக்காளர்கள் மத்தியில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற குழப்பம் ஏற்படுகிறது. இதை தடுக்க வேட்பாளர்களின் புகைப்படங்களை வாக்கு எந்திரத்தில் ஒட்ட உத்தரவிட வேண்டும் என்று டெல்லியை சேர்ந்த ஆகாஷ் கெலாட் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். வாக்கு சாவடிக்கு வெளியிடும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் புகைப்படங்களை பெரிதாக ஒட்ட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா அடங்கிய பெஞ்ச் விசாரித்து இது குறித்து தேர்தல் ஆணையம் 10 வாரத்துக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்