முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்லாமாபாத் பாதுகாப்பு ராணுவத்திடம் ஒப்படைப்பு

சனிக்கிழமை, 26 ஜூலை 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஜூலை.27 - இம்ரான்கான் போராட்டத்தை தொடர்ந்து பாகிஸ்தான் தலைநகரம் இஸ்லாமாபாத் பாதுகாப்பு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் வருகிற ஆகஸ்டு 14-ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அன்று தலைநகர் இஸ்லாமாபாத்தில் மிகப்பெரும் பேரணி மூலம் போராட்டம் நடத்த போவதாக தெகரிக்-இ-இன்சப் கட்சி தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடந்து பாராளுமன்ற தேர்தலில் முறைகேடு நடந்ததாகவும் அது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இப்போராட்டம் நடக்கிறது. இருந்து புறப் படுகிறது. இந்த போராட்டத்தின் மூலம் வடக்கு வஜிரிஸ்தானில் தீவிரவாதிகள் மீது அரசு எடுத்து வரும் ராணுவ நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இம்ரான்கான் கட்சி இப்போராட்டம் நடத்துவதாக கருதப்படுகிறது.

பேரணி மற்றும் போராட்டத்தின் மூலம் தலைநகர் இஸ்லாமாபாத்தின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இஸ்லாமாபாத்தின் பாதுகாப்பு முதல் போலீசாரிடம் இருந்து ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இது 3 மாதங்கள் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் பாதுகாப்பு கருதி ராணுவத்தை அழைக்க பாகிஸ்தான் அரசியல் சட்டத்தின் 245-வது பிரிவு வழி வகுக்குகிறது. அதன் அடிப்படையில் பாதுகாப்பு ராணுவத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்