முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்

சனிக்கிழமை, 26 ஜூலை 2014      உலகம்
Image Unavailable

 

ஜெருசலேம், ஜூலை.27 - இடையே கடந்த 3 வாரங்களாக நீடித்து வரும் தாக்குதல்களை 12 மணி நேரத்திற்கு நிறுத்திவைக்க, இஸ்ரேல் ராணுவமும் ஹமாஸ் இயக்கமும் ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னதாக, கடந்த 18-ம் தேதியன்றும், ஐ.நா.வின் வேண்டுகோளுக்கு இணங்க மனிதாபிமான அடிப்படையில் காஸா பகுதியில் நடைபெற்று வரும் தாக்குதல்களை 5 மணி நேரம் நிறுத்தி வைக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. தற்போது, இரண்டாவது முறையாக தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளது.

இஸ்ரேல் படையினருக்கும், ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஆன மோதல் நீடித்து வருகிறது. போர் நிறுத்தத்துக்கு உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று 12 மணிநேர போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் தரப்பில் கூறும்போது, "உள்ளூர் நேரப்படி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கிறோம். ஆனால் இதனை மீறி ஹமாஸ் தரப்பினர் தாக்குதல் நடத்தினார், அதற்கு பதிலடித் தர நாங்கள் தயார் நிலையில் இருப்போம்" என்று கூறியது

அதே போல, ஹமாஸ் செய்தி தொடர்பாளர் சமி அபு சூரி, ஐ.நா.வின் கோரிக்கையை ஏற்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் நேற்று முன்தினம் இரவு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி முன்வைத்த போர் நிறுத்த கோரிக்கையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ ஏற்றுக் கொண்டுள்ளார்.

காஸாவில் கடந்த ஜூலை 8- ஆம் தேதி முதல் நடந்துவரும் தாக்குதல்களில் பலியானோர் எண்ணிக்கை 875-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இன்று காலை, போர் நிறுத்தத்திற்கு முன்னர், காஸா எல்லையில் நடத்தப்பட்ட தாக்குதலிலில் 8 பேர் கொல்லப்பட்டனம் மற்றும் 10 பேர் காயமடைந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்