முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹஜ் பயணிகளுக்கான இடங்களை அதிகரிக்க பிரதமருக்கு கடிதம்

சனிக்கிழமை, 26 ஜூலை 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை.ஜூலை 27 - ஹஜ் யாத்திரைக்கு தமிழ்நாட்டுக்கு கூடுதல் இடம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரதம்ர் நரேந்திர மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில் தமிழ்நாடு ஹச் கமிட்டி சார்பில் ஹச் பயணம் மேற்கொள்ள 2014 ஆண்டு 13, 159 விண்ணப்பங்கள் பெற்ப்பட்டு உள்ளது. ஆனால் முஸ்லீம் மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து இந்திய ஹச் கமிட்டி தமிழகத்திற்கு இந்த ஆண்டு 2672 இடங்களே ஒதுக்கி உள்ளது தமிழகத்தில், ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மத்திய அரசின் சார்பில் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் ஹஜ் பயணிகளுக்கான இடங்களையும் அதிகரிக்க வேண்டும் எனமுதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்

இது தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் யாத்திரை செல்ல 13 ஆயிரத்து 159 பேர் இந்த ஆண்டு (2014) தமிழ்நாடு ஹஜ் கமிட்டிக்கு விண்ணப்பித்திருந்தனர். ஹஜ் பயணத்திற்கு மும்பையில் உள்ள ஹஜ் கமிட்டி தலைமையகம் வழிகாட்டுதலின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. அதன்படி தமிழ்நாட்டுக்கு 2672 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் 1180 இடங்கள் முன்பதிவு அடிப்படையிலானது. 1492 இடங்கள் பொது அடிப்படையிலானது.

கடந்த ஆண்டைவிட 100 இடங்கள் மட்டுமே தற்போது தமிழ்நாட்டுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஏராளமான பேர் ஹஜ் யாத்திரைக்கு செல்ல விண்ணப்பித்துள்ள நிலையில் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதற்கு முன்பு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு கூடுதல் இடங்களை ஒதுக்கி அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி உள்ளது. இது தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு உதவியாக இருந்தது. இதன் மூலம் கடந்த ஆண்டு 3696 பேர் ஹஜ் யாத்திரைக்கு சென்றிருக்கிறார்கள்.

இந்த ஆண்டு பெரிய எதிர்பார்ப்புடன் அவர்கள் காத்து இருந்தனர். ஆனால் குறைவான இடமே ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தாங்கள் நேரடியாக தலையிட்டு தமிழ்நாட்டில் இருந்து நிறைய பேர் ஹஜ் யாத்திரைக்கு செல்ல காத்திருப்பதை கருத்தில் கொண்டு அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் மத்திய வெளி விவகார துறைக்கு இதற்கான சிபாரிசுகளை கூறி அதிக இடங்களை ஒதுக்க வேண்டும். இதன் மூலம் ஏராளமான பேர் பயனடைவார்கள்.

இவ்வாறு அந்த கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்