Idhayam Matrimony

ஷியா பிரிவினர் வழிபாட்டுதலம் குண்டு வைத்து தகர்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 27 ஜூலை 2014      உலகம்
Image Unavailable

 

மொசூல், ஜூலை 28 - ஈராக்கில் ஷியா பிரிவினரின் வழிபாட்டு தலத்தை தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்துள்ளனர்.

ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் ராணுவத்துடன் உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சன்னி பிரிவை சேர்ந்தவர்கள். ஈராக்கில் மொசூல், கிர்குக், திக்ரித் உள்ளிட்ட பல நகரங்களை கைப்பற்றி உள்ளனர். சிரியாவில் சில பகுதிகள் இவர்களது கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. எனவே ஈராக் மற்றும் சிரியாவில் கைப்பற்றிய பகுதிகளை ஒன்றிணைத்து தனியாக இஸ்லாமிய நாடு அமைத்துள்ளனர். அதன் தலைவராக அபுபக்கர் அல் பக்தாதி நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் அமைத்துள்ள புதிய நாட்டில் அதிரடி உத்தரவுகள் மற்றும் சட்டங்களை தீவிரவாதிகள் பிறப்பித்து வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு எதிரான பல கட்டுப்பாடுகள் சட்ட திட்டங்களை உருவாக்கி உள்ளனர்.

மொசூல் நகரில் இருந்து கிறிஸ்தவர்களை மிரட்டி வெளியேறறி உள்ளனர். மொசூல் நகரில் சன்னி பிரிவின் நபி ஷியத் என்ற வழிபாட்டு தலம் உள்ளது. அதை தீவிரவாதிகள் நேற்று முன்தினம் குண்டு வைத்து தகர்த்தனர். அந்த வழிபாட்டு தலத்துக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்தினர். வழிபாட்டு தலத்தையும் மூடினர். பின்னர் அதை சுற்றி சக்திவாய்ந்த குண்டுகளை புதைத்து வெடிக்க செய்தனர். இதனால் அந்த வழிபாட்டு தலம் இடிந்து தரைமட்டமானது. அதை பலர் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தனர். இநத் தகவலை ஷியா பிரிவினரின் தலைவர் சமி அல் மசூடி உறுதி செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்