முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த ஆண்டு இறுதியில் 4 மாநில தேர்தல்

ஞாயிற்றுக்கிழமை, 27 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை 28 - இந்த ஆண்டு இறுதியில் 4 மாநில தேர்தல் நடக்கிறது. அதன் பிறகு டெல்லி சட்டசபைக்கும் தேர்தல் நடக்கவுள்ளது. இதனால் பாரதீய ஜனதாவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது.

மராட்டியம், அரியானா, காஷ்மீர், ஜார்கண்ட் ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு கடைசியில் நடைபெறவுள்ளது. காஷ்மீர் சட்டசபையின் பதவிக்காலம் மட்டும் 6 ஆண்டுகளாகும். இங்கு கடைசியாக 2008ம் ஆண்டு தேர்தல் நடந்தது. மற்ற மாநிலங்களில் 2009ம் ஆண்டு தேர்தல் நடந்தது. இவற்றில் காஷ்மீரில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி நடக்கிறது. அரியானாவில் காங்கிரஸ் ஆட்சி உள்ளது. மராட்டியத்தில் காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் கூட்டு சேர்ந்து ஆட்சி செய்கின்றன. ஜார்கண்டில் பல மாற்றங்களுக்கு பிறகு பாரதீய ஜனதா ஆட்சி உள்ளது.

இந்த மாநிலங்களில் டிசம்பர் மாதம் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. அதன் பிறகு டெல்லி சட்டசபைக்கும் தேர்தல் நடக்கும் என தெரிகிறது. அங்கு கடந்த முறை நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. எனவே காங்கிரஸ் உதவியுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தது. ஆனால் குறைந்த நாட்களிலேயே பதவியை துறந்து விட்டது. ஆயினும் சட்டசபை கலைக்கப்படவில்லை.

அங்கு ஓராண்டு காலத்திற்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. இதற்கிடையே சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பிரித்து வந்து பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க முயன்றதாக கூறப்பட்டது. அது வெற்றி பெறவில்லை. எனவே இப்போதைய ஜனாதிபதி ஆட்சி காலம் முடிந்ததும் சட்டசபையை கலைத்து விட்டு தேர்தலை நடத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. எனவே இந்த மாநிலத்தில் ஜனவரி அல்லது பிப்ரவரியில் தேர்தல் நடக்கலாம் என்று கூறப்படுகிறது.

நரேந்திர மோடி பதவியேற்று 6 மாத காலமான நிலையில் சட்டசபை தேர்தல் தொடங்குகிறது. இது பாஜகவுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. பாராளுமன்ற தேர்தலில் மோடி அலை வீசியது. அதனால் தனித்து வெற்றி பெற்றது. உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 5 தொகுதிகளையும் கைப்பற்றியது. இந்த தேர்தல் நடந்த 2 மாதத்தில் இப்போது நடந்த 3 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பாஜ தோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் வென்றது. இதனால் பாரதீய ஜனதா கட்சி அதிர்ச்சியில் உள்ளது. அதிலிருந்து மீள வேண்டுமானால் வரவிருக்கின்ற சட்டசபை தேர்தல்களில் வென்று காட்ட வேண்டும் என்று அக்கட்சியினர் எண்ணுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago