முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த மாதம் மத்திய மந்திரி சபை மாற்றம்: பிரதமர்

ஞாயிற்றுக்கிழமை, 27 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை 28 - உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா படுதோல்வி அடைந்ததால் அடுத்த மாதம் மந்திரி சபை மாற்றியமைக்கப்படுகிறது. ராஜ்நாத்சிங், சுஷ்மா ஸ்வராஜ் உட்பட 6 மத்திய மந்திரிகளின் இலாக்காக்களையும் மாற்றி அமைக்க பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் பாஜ கட்சி அமோக வெற்றி பெற்றது. இதற்கு மோடி அலைதான் காரணமென்றும் கூறப்பட்டது. இதன் மூலம் அந்த கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு 285 இடங்களை பெற்றது. இருந்தாலும் கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மோடி தலைமையிலான அரசு மே மாதம் 23ம் தேதி பதவியேற்றது. பிரதமர் மோடி உட்பட 25 கேபினட் அமைச்சர்களும், 22 துணை அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர். பிரதமர் மோடி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கினார். ஆனால் சில அமைச்சர்களின் செயல்பாடுகள் பிரதமர் மோடிக்கு அதிருப்தியை கொடுத்துள்ளது. ஆகவே அவர் சில அமைச்சர்களின் இலாகாக்களை மாற்ற தீர்மானித்துள்ளார். குறிப்பாக 6 அமைச்சர்களின் பதவிகள் மாற்றப்படுமென தெரிகிறது.

மேலும் அருண்ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத் போன்றவர்களின் வசம் இருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட இலாக்காக்களால் பணி சுமை ஏற்படுவதால் புதிய அமைச்சர்களும் நியமிக்கப்பட வேண்டும். எனவே பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தினத்திற்கு பின்னர் அடுத்த மாதம் மத்திவாக்கில் மந்திரி சபையை மாற்றியமைக்க தீர்மானித்துள்ளார்.

அப்போது உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வேறு இலாகாவிற்கு மாற்றப்படுவார் என்று தெரிகிறது. அவரது பதவிக்கு கட்காரி நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் இலாகாவும் மாற்றப்படலாம் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago