முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதின் கத்காரி வீட்டில் ஒட்டுக் கேட்புக் கருவிகள் சிக்கியதா?

ஞாயிற்றுக்கிழமை, 27 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை.28 - மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கத்காரியின் வீட்டில் ஒட்டுக் கேட்புக் கருவிகள் சிக்கியதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.

இதுகுறித்து பத்திரிக்கை செய்தி ஒன்றில் சக்தி வாய்ந்த ஒட்டுக் கேட்புக் கருவிகள் அமைச்சர் நிதின் கத்காரியின் படுக்கை அறையில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள கத்காரியின் அரசு வீட்டில்தான் இந்த கருவிகள் சிக்கியுள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் அதில் வெளியாகியிருந்தது.

மேலும் தற்செயலாக இது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், உடனடியாக அதை செயலிழிக்க வைக்க உத்தரவிடப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இதை கத்காரியே தற்போது மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் டிவிட்டரில் கருத்து தெரிவிக்கையில் எனது வீட்டுப் படுக்கை அறையில், சக்தி வாய்ந்த ஒட்டுக் கேட்கும் கருவிகள் சிக்கியதாக வெளியான செய்தி முற்றிலும் யூகமானது, தவறானது. அப்படி எதுவும் எடுக்கப்படவில்லை என்று கத்காரி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago