முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிர தேர்தலில் தொகுதி பங்கீடு: சரத்பவார் அதிரடி

ஞாயிற்றுக்கிழமை, 27 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஜூலை.28 - மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து நானும், சோனியாவும் சேர்ந்து முடிவு செய்வோம் என தேசிய வாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் அதிரடியாக அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் முதல்வர் பிரித்வி ராஜ் சவான் தலைமையிலான தேசிய வாத காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி பலத்த தோல்வியை தழுவியது. இதிலும் குறிப்பாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலேயே படுதோல்வி அடைந்தது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தோல்வியை அடுத்து பிரித்விராஜ் சவான் பதவி விலக வேண்டும் என அதிருப்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். சவானும் பதவி விலக முன்வந்தார். ஆனால் காங்கிரஸ் தலைவர் சோனியா அதனை ஏற்க மறுத்துவிட்டார். இதனையடுத்து தொழிற்துறை அமைச்சர் நாராயண் ரானே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் காங்கிரசுக்கு மற்றொரு தலைவலியாக நீண்ட கால கூட்டணி கட்சியாக இருந்து வரும் முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் தலைமையிலான தேசிய வாத காங்கிரஸ் கட்சி இம்முறை கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் மோத்தமுள்ள 288 சட்டப்பேரவையில் தொகுதி 144 இடங்களை ஒதுக்க வேண்டும் என தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், பிரித்விராஜ் சவான் தலைமையில் காங்கிரஸ் சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டது. இந்நிலையில் தேர்தல் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் சரத்பவார் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசுகையில் தொகு பங்கீடு குறித்து நானும், சோனியாவும் பேசி இறுதி முடிவு செய்வோம். தேர்தலை தனித்தனியாக சந்திக்க இரண்டு கட்சிகளும் விரும்பவில்லை. கூட்டணி குறித்து ஏதாவது அபிப்ராய பேதங்கள் இருந்தால் தெரிவிக்கும்படியும் தலைவர்களிடம் கேட்டுக் கொண்டார். இந்த கூட்டத்தின் போது துணை முதல்வர் அஜித்பவார், மாநில தலைவர் சுனில் தத்காரே உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

தேசிய வாத காங்கிரசின் 144 தொகுதி ஒதுக்கீடு கோரிக்கையை காங்கிரஸ் நிராகரித்து விட்டது. பின்னர் நிருபர்களிடம் பேசிய சுனில் தத்காரே கூறுகையில், மகாராஷ்டிராவில் அரசியல் சூழலை கருத்தில் கொண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உணர்வுகளை புரிந்து கொண்டு 144 தொகுதிகளை ஒதுக்க முன்வர வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்