முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் இடைத்தேர்தல்: நிதிஷ் - லல்லு - காங்., கூட்டணி

ஞாயிற்றுக்கிழமை, 27 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

பாட்னா, ஜூலை.28 - பீகாரில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் நிதிஷ்குமார், லல்லு பிரசாத் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளனர்.

பீகாரில் 10 சட்டப்பேரவை தொகுதிகளில் விரைவில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஆளும் கட்சியான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து அவர் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். ஜித்தன் ராம் மன்ஜி முதல் வரானார். இதற்கிடையில் நடைபற்ற ராஜ்யசபா தேர்தலில் ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்களை பாஜ வளைக்க முற்பட்டது. இதனை முறியடிக்க நிதீஷ்குமார், லல்லு பிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உதவியை நாடினர். இதனையடுத்து பீகாரில் அரசியல் கட்சிகள் மாறத் தொடங்கின.

மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து ஒரே எதிரியான வகுப்புவாத எதிரிகளை முறியடிக்க வேண்டும் என்று நிதீஷ் அழைப்பு விடுத்தார். பின்னர் லல்லு பிரசாத்தையும், காங்கிரஸ் மேலிட தலைவர்களையும் சந்தித்து பேசினார். இந்நிலையில் பீகாரில் 10 சட்டப்பேரவை தொகுதிகளில் இ"ைத் தேர்தல் வரவுள்ளது. ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்றதைப் போலவே இடைத்தேர்தலிலும், லல்லு மற்றும் காங்கிரஸ் கூட்டணியுடன் வெற்றி பெற நிதீஷ் வியூகம் வகுத்து வருகிறார். தற்போது சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், லல்லு பிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணி உறுதியாகி உள்ளதாக நிதீஷூக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து மாநில சிவில் சப்ளை அமைச்சர் ஷ்யாம் ரசாக், லல்லுவை சந்தித்து பேசிவிட்டு பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ஏறக்குறைய கூட்டணி முடிவாகி விட்டது. 3 கட்சிகளும் இணைந்து இடைத்தேர்தலை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இLு தொடர்பாக நிதீஷ், லல்லுவுடன் தொலைபேசியில் பேசினார் என்றார். முறையான அறிவிப்பு வரும் 30-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்