முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா. குழுவுக்கு மத்திய அரசு விசா வழங்க வேண்டும்: வாசன்

ஞாயிற்றுக்கிழமை, 27 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை. 28 – முன்னாள் மத்தியஅமைச்சர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ஐ.நா. சபையில் கடந்த மார்ச் மாதம் தீர்மானம் நிறைவேற்றபட்டு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

ஐ.நா. சபையின் அதிகாரி தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவை இலங்கையில் விசாரணை நடத்த அனுமதிக்க முடியாது என்று இலங்கை அரசு அறிவித்திருந்தது ஏற்புடையதல்ல. இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குறித்த விசாரணையை இந்தியாவில் நடத்தும் நோக்குடன் இந்திய அரசுக்கு ஐ.நா. விசாரணைக்குழு வேண்டுகோள் விடுத்திருந்தது. இதனை மத்திய அரசு நிராகரித்திருப்பதாக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த செய்தி தமிழக மக்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதோடு ஒட்டு மொத்த தமிழக மக்களின் உணர்வுகளை பா.ஜ.க. அரசு புறக்கணிப்பதாக அமைகிறது.

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க வருகை தர இருக்கும் ஐ.நா. விசாரணை குழுவுக்கு மோடியின் தலைமையிலான பாரதீய ஜனதா அரசு விசா வழங்கி விசாரணை முறையாக, முழுமையாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை கடற்படையினரின் தவறான அணுகுமுறையால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மிகுந்த கவலைக்குறியதாக ஆகியிருக்கிறது. இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.

கடந்த ஐக்கிய முற்போக்கு ஆட்சியின் தொடர் முயற்சியால் இதுவரையில் இரு நாட்டு மீனவ பிரதிநிதிகள் இரண்டு முறை பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். மீண்டும் தொடர்ந்து மீனவ பிரதிநிதிகள் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு உடன்படிக்கை ஏற்பட்டு அதன் மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காண தற்போதைய பா.ஜ.க. அரசு வழிவகை செய்ய வேண்டும்.

தமிழக மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிக்கவும் எல்லை தாண்டும் பிரச்சினையை தவிர்ப்பதற்கும் மத்திய அரசு இலங்கை அரசோடு பேச்சு வார்த்தை நடத்தி இதற்கு உடனடி நிரந்தர தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago