முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பளு தூக்கும் போட்டியில் தமிழக வீரர் சதீஷ்க்கு தங்கம்

திங்கட்கிழமை, 28 ஜூலை 2014      விளையாட்டு
Image Unavailable

 

கிளாஸ்கோ, ஜூலை.29 - காமன்வெல்த் போட்டிகளில் பளுதூக்கும் பிரிவில் தமிழக வீரர் சதீஷ் குமார், தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நடைபெற்ற77 கிளாஸ் எடைப்பிரிவு ஆடவர் பளு தூக்கும் போட்டியில் இந்திய வீரர்கள் சதீஷ் குமார், ரவி குடுலு ஆகியோர் பங்கேற்றனர். சதீஷ் தமிழகத்தை சேர்ந்தவர். குடுலு ஒடிசாவை சேர்ந்தவர்.

பளு தூக்கும் போட்டியில் ஸ்னாட்ச் பிரிவில் 149 கிலோ எடையையும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 179 கிலோ எடையையும் சதீஷ் தூக்கினார். மொத்தமாக 368 கிலோ எடையை தூக்கி சதீஷ் தங்கப்பதக்கம் வென்றார். ஸ்னாட்ச் பிரிவில் 149 கிலோ எடையுள்ள எடை தூக்கியதன் மூலம் சதீஷ் புதிய காமன்வெல்த் சாதனையையும் படைத்தார். கிளீன் ஆண்ட் ஜெர்க் பிரிவில் இரண்டாவது வாய்ப்பில் 179 கிலோ எடையை தூக்கியதன் மூலம் அவர் இந்தியாவுக்கு 6-வது தங்கப்பதக்கத்தை பெற்று தந்தார். ரவி குடுலு 317 கிலோ எடை தூக்கி, வெள்ளிப்பதக்கம் வென்றார். பிரான்சிஸ்கோ எடோவுண்டி வெண்கலப்பதக்கம் வென்றார்.

காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதலில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் கூறுகையில், இந்த போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் நான் விரும்பியது எனக்கு கிடைத்ததாக உணர்கிறேன். தேசிய பளு தூக்கும் வீரரான எனது தந்தை என்னை எப்போதும் உடற்பயிற்சிக் கூடத்துக்கு அழைத்து செல்வார். இப்போது எனது கணவு நனவாகியுள்ளது, என்றார்.

தமிழக வீரரான சதீஷ் சிவலிங்கம், வேலூர் சத்துவாச் சாரியைச் சேர்ந்தவர். 1992-ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி பிறந்தவர். 22 வயதாகும் சதீஷ் சிவலிங்கம், காமன்வெல்த் போட்டிகளில் பளு தூக்கும் போட்டிகளில் கலந்து கொள்ளும் 8 பேர் கொண்ட குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரே உறுப்பினர். முதல் முறையாக காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கிறார். சதீஷ் குமாரின் தந்தை சிவலிங்கம், முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு 2 மகன்கள். சதீஷ்குமார், பிரதீப்குமார் என்ற அவரது இரு மகன்களும் பளு தூக்கும் வீரர்கள். சதீஷ்குமார் 8-ம் வகுப்பு படிக்கும் போது வேலூர் சத்துவாச்சாரியில் தமிழக அரசால் நடத்தப்படும் சிறப்பு பளு தூக்கும் மையத்தில் சேர்ந்தார். மாநில அளவிலான போட்டியில் சப்-ஜூனியர் பிரிவில் வெற்றி பெற்ற சதீஷ் குமார், பின்னர் தேசிய சாம்பியன்ஷிப்பை வென்றார். சதீஷ்குமார், கடந்த மாதம் பாட்டியாலாவில் நடந்த தேர்வுப்போட்டியில் வெற்றி பெற்று காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் இந்திய பளு தூக்கும் அணியில் இடம் பிடித்தார்.

இந்திய விளையாட்டு ஆணையத்தால் அவர் காமன்வெல்த் போட்டி துவங்கும் முன்பே இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டு அங்கு பயிற்சி பெற்று வந்தார்.

பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வரும் சதீஷ்குமாருக்கு, தெற்கு ரயில்வேயில் விளையாட்டு கோட்டாவில் வேலை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தென்கொரியாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் சதீஷ் குமார் இந்தியாவின் சார்பில் பங்கேற்க உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்