முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி அமைச்சரவை ஆகஸ்ட் 14க்கு பிறகு விரிவாக்கம்

திங்கட்கிழமை, 28 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை.29 - பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஆகஸ்ட் 14-ஆம் தேதி பாராளுமன்ற கூட்டத் தொடர் முடிந்ததில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. புதிதாக 12 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்துள்ளது. தற்போது மோடி அமைச்சரவையில் 44 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர் அவர்களில் 22 பேர் கேபினட் அமைச்சர்கள் மற்றவர்கள் இணை அமைச்சர்கள். நிதி அமைச்சர்கள் அருண் ஜெட்லி ராணுவத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

அதே போல் முக்கிய துறைகளுக்கு தனி கேபினட் அமைச்சர் நியமிக்கவேண்டியுள்ளது. இதனால் மோடி அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பாராளுமன்றக் கூட்டத் தொடர் முடியும் வரை காத்திருக்க பிரதமர் முடிவு செய்தார் அதன் படி ஆகஸ்ட் 14-ஆம் தேதி பாராளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்தவுடன் அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளனர். பஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்காவின் மகன் ஜயந்த் சின்கா தற்போது ஹசாரிபாக் எம்.பி.யாக உள்ளார் அவருக்கு நிதித் துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது. வர்த்தக மற்றும் நிதித்துறை இணை அமைச்சராக இருக்கும் நிர்மலா சித்தாராமனிடம் இருந்து நிதித்துறை இணைப் பொறு்பபு ஜயந்த் சின்கா வசம் செல்கிறது. நிர்மலா சித்தாராமன் வர்த்தகத் துறை இணையமைச்சராக தொடர்வார். பாஜவின் தேசிய தலைவர் பதவிக்கு அமித்ஷாவுடன் போட்டியிட்ட ஜே.பி.நட்டாவுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க மோடி முடிவு செய்துள்ளார். மேலும் அமைச்சரவையில் புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என பிரதமர் விருப்பம் தெரிவித்தார்.

எனவே, பிரகாஷ் ஜவடேகர், ரவிசங்கர் பிரசாத், பியூஸ் கோயல் ஆகியோர் வசம் கூடுதலாக இருக்கும் பொறுப்புகளில் சில துறைகள் புதுமுகங்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது. ராஜஸ்தானுக்கு அமைச்சரவை வாய்ப்பளிக்கும் வகையில் புது முகங்களான ஆஜ்மீர் எம்.பி., சங்கரலால் ஜாட், ராஜ்யசபா எம்.பி. புபேந்திர யாதவ் ஆகியோருக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்