முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2648 தெரு மின் விளக்குகள் மேயரால் இயக்கி வைக்கப்பட்டன

திங்கட்கிழமை, 28 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஜூலை.29 - முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி மற்றும் முதன்மை செயலர்/ஆணையாளர், சென்னை மாநகராட்சி விக்ரம் கபூர், தலைமையில் சென்னை மாநகராட்சி விரிவாக்கப்பகுதிகளில் உள்ள பொதுமக்களின் நலன்களுக்காக பல்வேறு நடவடிக்கைகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது.

முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, பால்வளத்துறை அமைச்சர் வி. மூர்த்தி, சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி சென்னை மாநகராட்சி மண்டலம்-3 (மாதவரம்)ல் 25, 26, 29, 30, 31 மற்றும் 33 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட கீழ்க்கண்ட பகுதிகளில் ரூ.742.48 லட்சம் மதிப்பீட்டில் நிருவப்பட்டுள்ள 2648 புதிய எல்.இ.டி தெரு மின் விளக்குகளை பொது மக்களின் பயன்பாட்டிற்காக இயக்கி வைத்தார்கள்.

வ. எண் வார்டு இடங்கள் மின்விளக்குகளின் எண்ணிக்கை மதிப்பீட்டுத் தொகை ரூ.இலட்சத்தில்

1 25 கே.வி.ஆர். நகர், பத்மாவதி நகர், செல்லியம்மன் கோயில் தெரு, சிவராஜ் தெரு. 426 104.61

2 26 சிம்மம் அவன்யூ, ஸ்ரீ லட்சுமி அவன்யூ, செகரட்டேரியட் காலனி அவன்யூ. 656 199.71

3 29 முனுசாமி சாலை, பெருமாள் கோயில் தெரு, பல்ஜிபாளையம், வேலு தெரு. 354 85.91

4 30 எம்.ஆர்.எச். சாலை. 100 62.19

5 31 பழனியப்பா நகர், கே.கே.ஆர்கார்டன், அண்ணா நகர், அம்பேத்கார் நகர், வ.உ.சி தெரு. 587 158.53

6 33 சந்திரபிரபு காலனி, பெரிய சாலை, சாரங்கபாணி தெரு, தணிகாசலம் நகர் எ பிளாக், ராமலிங்கா காலனி பி பிளாக், பிருந்தாவன் கார்டன் 4வது தெரு. 525 131.53

மொத்தம் 2648 742.48

இந்நிகழ்ச்சிகளில் துணை மேயர் பா.பென்ஜமின் 3-வது மண்டலக்குழு தலைவர் டி. வேலாயுதம், மாமன்ற உறுப்பினர்கள் எம். கண்ணதாசன் , டி. தட்சணாமூர்த்தி, வி. ரமணி, பி. சங்கர், இ. சாந்தி, பிற மாமன்ற உறுப்பினர்கள், பொதுநல சங்க பிரதிநிதிகள், குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் சென்னை மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்